Press "Enter" to skip to content

சென்னையில் 38 பெரிய மேம்பாலங்கள் மூடப்பட்டன: முக்கிய சாலைகளுக்கு ‘சீல்’

அண்ணா சாலைக்குள் நுழைவதற்கு இருபுறமும் பல சிறிய சாலைகள் உள்ளன. இந்த சாலைகள் அனைத்தும் மூடப்பட்டு இருந்தது.

சென்னை:

சென்னையில் இன்று முழு ஊரடங்கையொட்டி 312 இடங்களில் காவல் துறையினர் சோதனை சாவடிகள் அமைத்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். முன்களப்பணியாளர்களான மருத்துவர்கள், வருவாய் துறையினர், தூய்மை பணியாளர்கள் ஆகியோர் தங்களது பணிகளை மேற்கொள்ள தடையின்றி அனுமதிக்கப்பட்டனர்.

சென்னையில் 38 பெரிய பாலங்கள் நேற்று இரவில் மூடப்பட்டன. இன்று காலையிலும் அந்த பாலங்களில் போக்குவரத்து நடைபெறாத வகையில் தடுப்புகளை காவல் துறையினர் அமைத்து இருந்தனர். இதற்கு முன்பு ஊரடங்கு காலங்களில் இளைஞர்கள் சிலர்எந்திர இருசக்கரக்கலன் (பைக்) போட்டி நடத்தி உள்ளனர். அதனை தவிர்ப்பதற்காகவே காவல் துறையினர் பாலங்களில் தடுப்புகளை அமைத்து கண்காணித்தனர்.

சென்னையில் உள்ள முக்கிய சாலைகள் அனைத்தும் முத்திரை வைக்கப்பட்டது போன்று காணப்பட்டது. அண்ணா சாலைக்குள் நுழைவதற்கு இருபுறமும் பல சிறிய சாலைகள் உள்ளன. இந்த சாலைகள் அனைத்தும் மூடப்பட்டு இருந்தது. அண்ணாசாலையிலும் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் தடுப்புகளை அமைத்து காவல் துறையினர் கண்காணித்தனர்.

வேப்பேரி ரித்தர்டன் சாலை, புரசைவாக்கம் டானா தெரு ஆகியவற்றில் இரும்பு தடுப்புகளை வைத்து யாரும் செல்ல முடியாத அளவுக்கு கட்டி வைத்திருந்தனர். இப்படி சென்னை மாநகர் முழுவதும் சாலைகள் மூடப்பட்டு இருந்ததால் அத்தியாவசிய பணிகளில் ஈடுபட்டவர்களும் சுற்றியே தங்கள் இடங்களுக்கு செல்ல முடிந்தது.

இந்த கட்டுப்பாடுகள் மற்றும் சோதனைகள் நாளை காலை வரை நீடிக்கும் என்ப தால் பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனவும், தேவையில்லாமல் வெளியில் வர வேண்டாம் எனவும் காவல் துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »