Press "Enter" to skip to content

இந்தியாவில் ஒமைக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 3,623 ஆக அதிகரிப்பு

சிகிச்கைக்கு பின்னர் 1,409 பேர் குணமடைந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

புதுடெல்லி:

இந்தியாவில் 27 மாநிலங்களில் ஒமைக்ரான் நச்சுநுண்ணுயிர் (வைரஸ்)  தொற்று பரவியுள்ளது.   நாடு முழுவதும் ஒமைக்ரான் வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,623  ஆக அதிகரித்துள்ளது. 1,409 பேர் ஒமைக்ரான் சிகிச்சைக்கு பின்னர் குணமடைந்துள்ளனர்.  

அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 1009 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். டெல்லியில் 513 பேரும், கர்நாடகாவில் 441 பேரும், ராஜஸ்தானில் 373 பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 333 ஆக உயர்ந்துள்ளது. 

தமிழ்நாட்டில் ஒமைக்ரான் தொற்று பாதிப்புக்கு ஆளானோர் எண்ணிக்கை 185 ஆக உயர்ந்துள்ளது.  அவர்கள் அனைவரும் சிகிச்சைக்கு பின் குணமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  குஜராத்தில் 204, ஹரியானாவில் 128 பேருக்கும் ஒமைக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »