Press "Enter" to skip to content

பூஸ்டர் தடுப்பூசி: முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார்

இந்தியா முழுவதும் நாளை பூஸ்டர் தடுப்பூசி செலுத்துமு் பணி தொடங்கும் நிலையில், தமிழகத்தில் மு.க. ஸ்டாலின் பட்டினப்பாக்கத்தில் தொடங்கி வைக்கிறார்.

சென்னை:

கொரோனா பாதிப்பில் இருந்து விடுபட தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. தமிழகத்தில் இதுவரை 8 கோடியே 83 லட்சத்து 2,071  தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. இதற்காக சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு தடுப்பூசி போடப்படுகிறது.

இதில் மாநில அளவில் முதல் தவணை தடுப்பூசி செலுத்தியவர்களின் எண்ணிக்கை 87.35 சதவீதம் ஆகும். 2-ம் தவணை தடுப்பூசி செலுத்தியவர்களின் எண்ணிக்கை 61.46 சதவீதமாகும்.

சென்னையை பொறுத்த வரை 92 சதவீதம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசியும், 2-ம் தவணை தடுப்பூசி 71 சதவீதம் பேருக்கும் செலுத்தப்பட்டுள்ளது.

இந்த சூழலில் கொரோனா உருமாறி ‘ஒமைக்ரான்’ வைரசாக வேகமாக பரவி வருவதால் அரசு பல்வேறு முன் எச்சரிக்கை நடவடிக்கைளை எடுத்து வருகிறது.

இதன் ஒரு கட்டமாக பூஸ்டர் தடுப்பூசி போடும் பணியும் நாளை தொடங்குகிறது. சென்னை பட்டினப்பாக்கம் எம்.ஆர்.சி. நகரில் உள்ள ‘இமேஜ்’ஆடிட் டோரியத்தில் நடைபெறும் இந்த முகாமை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். முன்களப் பணியாளர்கள், 2 தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் பூஸ்டர் தடுப்பூசி போட தகுதியானவர்கள்.

இதுகுறித்து சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:-

தமிழகத்தில் நாளை முதல் பூஸ்டர் தடுப்பூசி போடும் பணி தொடங்குகிறது. முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இதை தொடங்கி வைக்கிறார்.

முதல் தவணை மற்றும் 2-ம் தவணை எந்தவகை தடுப்பூசி செலுத்தப்பட்டதோ, அந்த தடுப்பூசியே பூஸ்டர் டோஸ் ஆக போடப்படும்.

தமிழகத்தில் 35.46 லட்சம் பேர் தடுப்பூசி போடுவதற்கு தகுதியானவர்களாக உள்ளனர்.

இதில் 9.78 லட்சம் பேர் முன்கள பணியாளர்கள். 5.65 லட்சம் பேர் சுகாதாரப் பணியாளர்கள். 20.03 லட்சம் பேர் இணை நோயாளிகள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள்.

இவர்களில் தடுப்பூசி போட்டு 9 மாதங்கள் கடந்தவர்கள், 2021 ஏப்ரல் 14-க்கு முன்வரை தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போட்டுக்கொள்ள தகுதியானவர்கள். அந்த வகையில் 4 லட்சம் பேர் நாளை பூஸ்டர் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »