Press "Enter" to skip to content

அனைவரும் முக கவசம் அணிந்தால் லாக்டவுன் கிடையாது – டெல்லி முதலமைச்சர் உறுதி

கொரோனா அதிகரித்தாலும் டெல்லி மக்கள் பயப்படத் தேவையில்லை என்றும் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி:

ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரகாண்டில் தேர்தல் பிரச்சாரத்தில் கலந்து கொண்டார். இதையடுத்து ஜனவரி 4 ஆம் தேதி கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து அவர் தனிமைப்படுத்திக் கொண்டார்.  

சிகிச்சைக்கு பின் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்ட அவர் இன்று மீண்டும் பணிக்கு திரும்பினார். இதையடுத்து கெஜ்ரிவால் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் பேசியதாவது:  

கொரோனா காரணமாக இரண்டு நாட்கள் காய்ச்சல் இருந்தது. 7-8 நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட பிறகு, நான் மீண்டும் உங்கள் சேவைக்கு வந்துள்ளேன்; இப்போது நன்றாக இருக்கிறது. 

கொரோனா பரவல் வேகமாக அதிகரித்து வருகிறது. இன்றைய சுகாதாரத்துறை தகவல்படி சுமார் 22,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக எதிர்பார்க்கப்படுகின்றன. தொற்று அதிகரித்து வருகிறது.  ஆனால் பயப்பட தேவையில்லை. 

கடந்த கொரோனா அலையின் தரவுகளை ஆய்வு செய்த பிறகே இதை சொல்கிறேன். கடந்த ஆண்டு மே மாதத்தில் கொரோனா இரண்டாவது அலையின் போது, ​​டெல்லியில் ஒரு நாளைக்கு புதிய கொரோனா பாதிப்பு 20,000 க்கும் மேல் பதிவானது. இருப்பினும், இந்த முறை, தினசரி இறப்புகள் இரண்டாவது கொரோன  அலையை விட ஒப்பீட்டளவில் மிகக் குறைவு.  

நாங்கள் லாக்டவுன் கொண்டு வர விரும்பவில்லை. நீங்கள் முக கவசம் அணிந்தால் நாங்கள் கொண்டு வர மாட்டோம். லாக்டவுனைப் பற்றி இப்போதைக்கு எந்த நோக்கமும் இல்லை,  இவ்வாறு கெஜ்ரிவால் தனது பேட்டியின்போது தெரிவித்தார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »