Press "Enter" to skip to content

தமிழகத்தில் 89.60 சதவீதம் பேருக்கு கொரோனா தடுப்பூசி – சுகாதாரத்துறை தகவல்

நேற்று ஒரே நாளில் 33,129 பேர் பூஸ்டர் தடுப்பூசி போட்டுள்ளதாக மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை:

தமிழகத்தில் 89.60 சதவீதம் பேருக்கு முதல் தவணை கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 66.80 சதவீதம் பேர் இரண்டாவது தடுப்பூசியைப் பெற்றுள்ளனர் என்று மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. நேற்று நடைபெற்ற 19வது மெகா தடுப்பூசி முகாமில் 14,29,736 பேர் தடுப்பூசியை பெற்றனர். அவர்களில் 3,68,797 பேர் முதல் டோஸையும், 10,27,810 பேர் இரண்டாவது டோஸையும் பெற்றுள்ளனர் என்று செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று ஒரே நாளில்  33,129 பேர் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டனர். பூஸ்டர் தடுப்பூசி டோஸ் எண்ணிக்கை நேற்றுவரை 2,17,414 ஆக இருந்தது என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »