Press "Enter" to skip to content

தென் மாவட்டங்களில் 5 நாட்கள் மழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை:

தென் தமிழகம் வடகடலோரம் மாவட்டங்களில் 5 நாட்கள் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் கூறியதாவது:-

தென் தமிழகத்தில் இருந்து ராயலசீமா வரை வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்றும், நாளையும் தென் தமிழகம், வடகடலோர தமிழகம் மற்றும் அதனையொட்டிய மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

27-ந்தேதி தென் தமிழகம் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, மயிலாடுதுறை, காரைக்கால் பகுதிகளில் லேசான மழை பெய்யும்.

28, 29-ந்தேதிகளில் தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »