Press "Enter" to skip to content

இலங்கை சிறையில் உள்ள 55 தமிழக மீனவர்கள் விடுதலை – நீதிமன்றம் உத்தரவு

தமிழக மீனவர்களை விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தி வந்தனர்.

சென்னை:

வங்கக் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 55 பேரை எல்லைதாண்டி மீன்பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துச் சென்றுள்ளனர். அவர்களின் விசைப்படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர். 

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் மற்றும் அவர்களது படகுகளை விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதற்கிடையே, தமிழக மீனவர்களிடம் இருந்து பறிமுதல் செய்த படகுகளை அடுத்த மாதம் ஏலத்தில் விட அந்நாட்டு அரசு முடிவு செய்தது.

இந்நிலையில், இலங்கை சிறையில் உள்ள 55 தமிழக மீனவர்களை நிபந்தனையுடன் விடுதலை செய்து அந்நாட்டு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. மீன்பிடி படகுகள் ஏலம் விடுவது குறித்த வழக்கு விசாரணை ஏப்ரல் 1-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »