Press "Enter" to skip to content

பத்ம பூஷன் விருதை ஏற்கப் போவதில்லை – புத்ததேவ் பட்டாச்சார்யா தகவல்

பத்ம பூஷன் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட புத்ததேவ் பட்டாச்சார்யா அதை ஏற்க மறுத்துவிட்டதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் உறுதிபடுத்தி உள்ளது.

புதுடெல்லி:

நாட்டின் 73-வது குடியரசு தினத்தை முன்னிட்டு 2022- ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் பெறுபவர்களின் பட்டியலை மத்திய அரசு நேற்று வெளியிட்டது. இதில் மேற்கு வங்காள மாநில முன்னாள் முதலமைச்சர் புத்ததேவ் பட்டாச்சார்யாவின் பெயர் பத்ம பூஷன் விருது பட்டியலில் இடம் பெற்றுள்ளது. 

இந்நிலையில் தனக்கு பத்ம பூஷன் விருது வேண்டாம் என அவர் நிராகரித்துள்ளார். இது குறித்து   புத்ததேவ் பட்டாச்சார்யா வெளியிட்ட அறிக்கையில், பத்ம பூஷன் விருது பற்றி எனக்கு எதுவும் தெரியாது. அதைப் பற்றி யாரும் எதுவும் சொல்லவில்லை. எனக்கு பத்ம பூஷன் வழங்கப்பட்டால், அதை ஏற்கப்போவதில்லை என்று  தெரிவித்துள்ளார்.  

அவரது அறிவிப்பை எதிரொலிக்கும் வகையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், பத்ம பூஷன் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட புத்ததேவ் பட்டாச்சார்யா அதை ஏற்க மறுத்துவிட்டார். அரசின் இத்தகைய விருதுகளை நிராகரிப்பது  கட்சியின் நிலையான கொள்கையாகும்.  எங்களின் பணி விருதுகளுக்காக அல்ல, மக்களுக்கானது. முன்னதாக வழங்கப்பட்ட  விருதை இ.எம்.எஸ் மறுத்துவிட்டார். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

நாட்டின் உயரிய விருது அறிவிக்கப்பட்ட சில நிமிடங்களில் அதை வேண்டாம் என்று புத்ததேவ் பட்டாச்சார்யாவுக்கு  கூறியிருப்பது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »