Press "Enter" to skip to content

முப்படையினர் பாசறை திரும்பும் நிகழ்வில் கண்கவர் காட்சி

இந்தியாவில் தயாரித்த 1000 டிரோன்களை வைத்து கண்கவர் காட்சி நடத்தப்பட்டது.

புது டெல்லி:

கடந்த புதன்கிழமை நடைபெற்ற 73-வது குடியரசு தினவிழாவில் பங்கேற்க வந்த முப்படை வீரர்கள் தங்கள் முகாம்களுக்கு திரும்பும் பாசறை திரும்புதல் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

டெல்லி விஜய் சவுக்கில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு காலாசாரம் பற்றிய லேசர் ஒளிக்காட்சிகள் நடைபெற்றன. சூரிய அஸ்தமன நேரத்தில் டிரோன் கண்காட்சியும் இடம்பிடித்தது.

இதில் புதுமையான முறையில் மேக் இன் இந்தியா திட்டத்தின்படி, இந்தியாவில் தயாரித்த 1000 டிரோன்களின் காட்சி பார்வையாளர்களை கவர்ந்தது. 

விஜய் சவுக் பகுதியில், இந்திய நிலப்பரப்பு வடிவில்  டிரோன்கள்  காட்சியளித்தன. முதல் முறையாக இந்தியாவில் தயாரித்த 1000 டிரோன்களை வைத்து கண்கவர் காட்சி நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்ச்சியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »