Press "Enter" to skip to content

இந்தியாவில் 165 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது – மத்திய அரசு

இன்று இரவு 7 மணி வரையில் சுமார் 57 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

புதுடெல்லி:

நாட்டில் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தும் பணிகள் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 16-ம் தேதி தொடங்கியது. இதில், முன்கள பணியாளர்கள் மற்றும் சுகாதார பணியாளர்களுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன. அதன்பின், கடந்த ஆண்டு ஜூனில் இருந்து நாடு முழுவதும் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் தடுப்பூசிகள் செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன.

இந்நிலையில், இந்தியாவில் ஒரே நாளில் 53 லட்சத்துக்கும் கூடுதலான கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு உள்ளன.

இதன்மூலம் இந்தியாவில் மொத்தம் 165,60,85,526 கோடி டோஸ்கள் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது என மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

15 முதல் 18 வயதுடையோரில் 4.5 கோடிக்கும் அதிகமானோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »