Press "Enter" to skip to content

உண்மையான ‘இந்துத்வாவாதி’யாக இருந்திருந்தால் ஜின்னாவை சுட்டுக் கொன்றிருப்பார்: சஞ்சய் ராவத்

சிவ சேனா எம்.பி. சஞ்சய் ராவத் காந்திஜியின் மறைவுக்கு உலகம் இன்றும் இரங்கல் தெரிவிக்கிறது எனத் தெரிவித்துள்ளார்.

மகாத்மா காந்தியின் 75-வது நினைவு தினம் இன்று அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. தலைவர்கள் அவரது படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில், காந்தி சுட்டுக்கொலை செய்யப்பட்டது குறித்து சிவசேனாவின் முக்கிய தலைவர்களில் ஒருவரும், நாடாளுமன்ற எம்.பி.யுமான சஞ்ச் ராவத் கூறுகையில் ‘‘பாகிஸ்தான் உருவாக வேண்டும் என்பது ஜின்னாவின் கோரிக்கையாக இருந்தது. அங்கே, உண்மையான ‘இந்துத்வாவாதி’யாக இருந்திருந்தால், அவன்/அவள் (he/she) ஜின்னாவை சுட்டுக் கொன்றிருப்பார், காந்தியை அல்ல. அத்தகைய செயல் தேசபக்தியின் செயலாக இருந்திருக்கும். காந்திஜியின் மறைவுக்கு உலகம் இன்றும் இரங்கல் தெரிவிக்கிறது’’ எனத் தெரிவித்துள்ளார்.

இந்துத்வா குறித்து சிவ சேனாவுக்கும், பா.ஜனதாவுக்கும் இடையில் கருத்து மோதல் இருந்து வரும் நிலையில், சஞ்சய் ராவத் இவ்வாறு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »