Press "Enter" to skip to content

பிப்ரவரி 1 முதல் கடற்கரைக்கு செல்ல அனுமதி- சென்னை மாநகராட்சி அறிவிப்பு

கடற்கரைகளில் மக்கள் கொரோனா கட்டுப்பாட்டு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சென்னை:

சென்னையில் பிப்ரவரி 1-ம் தேதி முதல் கடற்கரைகளுக்கு மக்கள் செல்லலாம் என மாநகராட்சி அறிவித்துள்ளது. 

தமிழகத்தில் இந்த மாத தொடக்கத்தில் கொரோனா தொற்று அதிகரித்த நிலையில் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு ஆகியவற்றை தமிழக அரசு அமல்படுத்தியது. 

அதேபோன்று வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கோயில்கள், தேவாலயங்களுக்கு மக்கள் செல்லவும், அனைத்து நாட்களும் கடற்கரைகளுக்கு செல்லவும் தடை விதித்திருந்தது. 

இந்நிலையில் தற்போது கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் இரவு ஊரடங்கு மற்றும் ஞாயிறு முழு ஊரடங்கு ஆகியவற்றை தமிழக அரசு ரத்து செய்தது. இதை தொடர்ந்து பிப்ரவரி 1-ம் தேதி முதல் சென்னையில் உள்ள கடற்கரைகளுக்கு மக்கள் செல்லலாம் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

அதேசமயம் கடற்கரைகளுக்கு கூட்டமாக மக்கள் செல்லக்கூடாது. முகக்கவசம் உள்ளிட்ட கொரோனா கட்டுப்பாடு வழிமுறைகளை மக்கள் பின்பற்ற வேண்டும் என மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »