Press "Enter" to skip to content

ஜூனியர் உலகக் கோப்பை போட்டியில் நிலநடுக்கம்- குலுங்கிய மைதானம்

சுமார் 20 நொடிகள் வரை நீடித்த இந்த நிலடுக்கம் ரிக்டர் அளவு 5.2-ஆக பதிவாகியது.

போர்ட் ஆப் ஸ்பெயின்:

19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஜூனியர் உலகக் கோப்பை தொடர் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்று வருகிறது. 

லீக் சுற்றுகள் அனைத்தும் முடிவுற்ற நிலையில் அரையிறுதிப் போட்டிகளில் இங்கிலாந்து, ஆப்கானிஸ்தான் அணியும், இந்தியா, ஆஸ்திரேலிய அணிகளும் மோதவுள்ளன.

இந்நிலையில் தரவரிசையை நிர்ணயம் செய்ய தொடரிலிருந்து வெளியேறிய அணிகளுக்கு இடையில் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் குயின்ஸ் பார்க் மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் ஜிம்பாப்வே, அயர்லாந்து அணிகள் மோதின.

இந்த ஆட்டத்தில் முதல் பாதியில் 5-வது ஓவர் நடைபெற்று வந்தபோது நில நடுக்கம் ஏற்பட்டது. இதனால் ஒளிக்கருவிகள் (ஒளிக்கருவி (கேமரா)க்கள்) திடீரென்று ஆட்டம் காண துவங்கின. பார்வையாளர்களும் ஒன்றும் புரியாமல் திகைத்தனர்.

மைதானத்தில் ஆடிய வீரர்கள் மட்டும் நிலநடுக்கத்தை உணராமல் ஆடி வந்தனர். 

இப்போட்டியை வர்ணனை செய்த ஆண்ட்ரூ லெனார்ட், ‘பூகம்பம் ஏற்பட்டது போல தோன்றியது. அது உண்மைதான் என்று பின்னர் தெரிய வந்தது. மிகப்பெரிய தொடர் வண்டி ஓடினால் எப்படி நிலம் அதிருமோ, அதுபோன்று நிலம் அதிர்ந்தது. மைதானமும், கட்டிடங்களும் பயங்கரமாக குலுங்கின’ என நேரலையில் தெரிவித்தார். 

சுமார் 20 நொடிகள் வரை நீடித்த இந்த நிலடுக்கம் ரிக்டர் அளவு 5.2-ஆக பதிவாகியது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »