Press "Enter" to skip to content

கோட்சேவின் வாரிசுகளுக்கு இந்திய மண்ணில் இடமில்லை- முதல்வர் ஸ்டாலின் ட்வீட்

மகாத்மா காந்தியின் 75-வது நினைவு தினத்தையொட்டி முதல்வர் ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

சென்னை:

மகாத்மா காந்தியை சுட்டுப் படுகொலை செய்த கோட்சேவின் வாரிசுகளுக்கு இந்திய மண்ணில் இடமில்லை என சூளுரைப்போம் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

1948-ம் ஆண்டு ஜனவரி 30-ம் தேதி மகாத்மா காந்தி நாதுராம் கோட்சேவால் படுகொலை செய்யப்பட்டார்.  காந்தியின் 75-வது நினைவு தினம் இன்று நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. 

இதையடுத்து மகாத்மா காந்திக்கு தமிழக அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள காந்தியடிகளின் திருவுருவ சிலைக்கு கீழே வைக்கப்பட்ட புகைப்படத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர் அஞ்சலி செலுத்தினார். அவரை தொடர்ந்து ஆளுநர் ஆர்.என்.ரவியும் மரியாதை செலுத்தினார்.

இதனை தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின் ட்விட்டரில்  ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் முதல்வர் ஸ்டாலின் கூறியதாவது:-

மக்களின் நலனே தேசத்தின் நலன் என உழைத்த உத்தமர் காந்தியடிகளின் நினைவுநாளில், அன்பும் சகோதரத்துவமும் கொண்டு ஒற்றுமை பேணிட உறுதியேற்று, கோட்சேவின் வாரிசுகளுக்கும் அவர்களது தீய எண்ணங்களுக்கும் நம் இந்திய மண்ணில் இடமில்லை எனச் சூளுரைப்போம்.

இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »