Press "Enter" to skip to content

கர்நாடகத்தில் இன்று முதல் இரவுநேர ஊரடங்கு ரத்து

கர்நாடகத்தில் பொது இடங்களில் முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியைப் பின்பற்றுவது, சானிடைசர் பயன்படுத்துவது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.

பெங்களூரு:

இந்தியாவில் மகாராஷ்டிராவை தொடர்ந்து கர்நாடகா மாநிலத்தில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. அதனால் கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் ஜனவரி 7-ம் தேதி முதல் இரவுநேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. 

கர்நாடகத்தில் தற்போது கொரோனா 3-வது அலை குறைய தொடங்கியுள்ளது. இந்த அலையில் கொரோனா பரவல் அதிகமாக இருந்தாலும், உயிரிழப்பு மற்றும் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை மிக குறைவாக உள்ளது.

இதற்கிடையே தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான ஆலோசனைக் கூட்டம் முதல் மந்திரி பசவராஜ் தலைமையில் நடந்தது.

இதில், இரவுநேர ஊரடங்கு வரும் 31-ம் தேதி முதல் ரத்து செய்யப்படும் என முதல் மந்திரி அறிவித்தார்.

இந்நிலையில், கர்நாடகாவில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்வு இன்று முதல் அமலுக்கு வருகிறது. அதன்படி அமலில் இருந்த இரவு நேர ஊரடங்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. பெங்களூரு நகரில் 1 முதல் 9-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படுகின்றன.

திருமண நிகழ்வில் அதிகமாக 300 பேர் வரை மட்டுமே பங்கேற்க வேண்டும் என கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. திரையரங்கம்களில் 50 சதவீத இருக்கைகளை பயன்படுத்த வேண்டும் எனவும் உத்தரவில் நீட்டிக்கப்பட்டுள்ளது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »