Press "Enter" to skip to content

அமெரிக்க பிணைக் கைதியை விடுவிக்க வேண்டும் – தலிபான்களுக்கு ஜோ பைடன் வேண்டுகோள்

எந்தவொரு அப்பாவி பொதுமக்களையும் அச்சுறுத்துவதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

வாஷிங்டன்: 

ஆப்கானிஸ்தானில் பொறியியாளராக பணியாற்றிய அமெரிக்க கடற்படை வீரர் மார்க் ஃப்ரீரிச்  இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, தலிபான்களால் பிணைக் கைதியாக பிடிக்கப்பட்டார்.

செப்டம்பர் 11, 2001 தாக்குதல்களைத் தொடர்ந்து ஆப்கானிஸ்தானில் தலிபான்களுக்கு எதிராக நடத்திய 20 வருடங்களுக்கு மேலான போரை முடித்துக் கொள்வதாக அமெரிக்கா அறிவித்தது.கடந்த ஆக்ஸ்ட் மாதம் அந்நாட்டு  படைகள் முழுமையாக  அங்கிருந்து வெளியேறின. இதை அடுத்து ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் மீண்டும் அதிகாரத்தை கைப்பற்றியுள்ளனர்.

இந்நிலையில் அமெரிக்க கடற்படை வீரர் மார்க் ஃப்ரீரிச்ஸ் கடத்தப்பட்டதன் இரண்டு ஆண்டு நிறைவடைந்ததை முன்னிட்டு அவரது சகோதரி ககோரா  மார்க்கை மீட்க வேண்டும் என்று அமெரிக்க அதிபருக்கு கோரிக்கை விடுத்துள்ளார். ஒவ்வொரு நாளும் மார்க்கை வீட்டிற்கு அழைத்து வராதது அவர் ஆபத்தில் இருப்பதை உணர்த்துவதாக ககோரா தெரிவித்திருந்தார்.

இதையடுத்து தலிபான்கள் மார்க்கை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன்  கோரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்கர்கள் உள்பட எந்தவொரு அப்பாவி குடிமகனின் பாதுகாப்பையும் அச்சுறுத்துவது ஏற்றுக்கொள்ள முடியாதது, பணயக்கைதிகளாக பிடித்திருப்பது கோழைத்தனமான செயலாகும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »