Press "Enter" to skip to content

கேரளாவில் குறையாத பாதிப்பு- ஒரே நாளில் 51 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று

கேரளாவில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள 3 லட்சத்து 54 ஆயிரத்து 595 நோயாளிகளில் 3.4 சதவீத நோயாளிகள் மட்டுமே ஆஸ்பத்திரியில் தங்கி சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

திருவனந்தபுரம்:

கேரளாவில் கொரோனா இன்னும் கட்டுக்குள் வரவில்லை. நாளுக்கு நாள் தொற்று அதிகமாகிக் கொண்டிருக்கிறது. நேற்று ஒரே நாளில் மட்டும் 51 ஆயிரத்து 570 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களில் 49.89 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

எர்ணாகுளத்தில் 9704 பேரும், திருச்சூரில் 7289 பேரும், திருவனந்தபுரத்தில் 5746 பேரும், கோட்டயத்தில் 3889 பேரும், கோழிக்கோட்டில் 3872 பேரும், கொல்லத்தில் 3836 பேரும், பாலக்காட்டில் 3412 பேரும், ஆலப்புழாவில் 2861 பேரும், வலப்புறத்தில் 2796 பேரும், கன்னிமலையில் 2796 பேரும், பத்தனூரில் 1796 பேரும், இடுக்கியில் 1565 பேரும், வயநாட்டில் 1338 பேரும், மற்றும் காசர்கோட்டில் 769 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மாநிலத்தில் தற்போது மொத்தமாக 5 லட்சத்து 27 ஆயிரத்து 362 பேர் நேரடி கண்காணிப்பில் உள்ளனர். இதில் 5 லட்சத்து 14 ஆயிரத்து 734 பேர் வீட்டு தனிமையிலும் 12 ஆயிரத்து 628 பேர் ஆஸ்பத்திரிகளிலும் உள்ளனர்.

தற்போது தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள 3 லட்சத்து 54 ஆயிரத்து 595 நோயாளிகளில் 3.4 சதவீத நோயாளிகள் மட்டுமே ஆஸ்பத்திரியில் தங்கி சிகிச்சை பெற்று வருகிறார்கள். மற்ற அனைவரும் வீட்டு தனிமையில் இருந்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »