Press "Enter" to skip to content

அனைத்து பிரச்சினைகள் குறித்தும் விவாதிக்க தயாராக இருக்கிறோம்: பிரதமர் மோடி உறுதி

வரவு செலவுத் திட்டம் கூட்டத்தொடர் இன்று தொடங்கும் நிலையில் பாராளுமன்ற வளாகத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்தார் பிரதமர் மோடி.

வரவு செலவுத் திட்டம் கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது. ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று உரை நிகழ்த்துகிறார். நாளை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வரவு செலவுத் திட்டத்தை தாக்கல் செய்கிறார்.

இந்த நிலையில் பிரதமர் மோடி பாராளுமன்ற வளாகத்தில் பத்திரிகையாளர்கள் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது-

வரவு செலவுத் திட்டம் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. இந்த செசனுக்கு அனைத்து எம்.பி.க்களையும் வரவேற்கிறேன். இன்றைய உலகளாவிய சூழ்நிலையில் இந்தியாவுக்காக ஏராளமான வாய்ப்புகள் உள்ளன.  இந்த அமர்வு நாட்டின் பொருளாதார முன்னேற்றம், தடுப்பூசி திட்டம், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகள் குறித்து உலகில் நம்பிக்கையை ஏற்படுத்துகிறது.  விவாதங்கள் மற்றும் திறந்த மனதுடன் விவாதங்கள் ஆகியவை உலகளாவிய தாக்கத்திற்கு ஒரு முக்கிய வாய்ப்பாக மாறும்.

அனைத்து எம்.பி.க்களும், அரசியல் கட்சிகளும் திறந்த மனதுடன் தரமான விவாதங்களை நடத்தி நாட்டை விரைவாக வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வ உதவுவார்கள் என்று நம்புகிறேன்.

பல மாநில தேர்தல்கள் அமர்வுகளையும் விவாதங்களையும் பாதிக்கும் என்பது உண்மைதான். ஆனால் அனைத்து எம்.பி.க்களையும் நான் கேட்டுக்கொள்கிறேன், தேர்தல்கள் தொடரும். ஆனால் வரவு செலவுத் திட்டம் அமர்வு முழு ஆண்டுக்கான திட்டத்தை வகுக்கிறது. இந்த அமர்வை நாம் எவ்வளவு பயனுள்ளதாக ஆக்குகிறோமோ, அது ஆண்டின் பிற்பகுதியில் நாட்டை பொருளாதார உயரத்திற்கு கொண்டு செல்வதற்கு சிறந்த வாய்ப்பு கிடைக்கும். நாடாளுமன்ற திறந்த மனதோடு தங்களது கருத்துகளை முன் வைக்கலாம். அனைத்து பிரச்சினைகள் குறித்து விவாதிக்க தயாராக இருக்கறோம்.’’ என்றார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »