Press "Enter" to skip to content

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் – தமிழகம் முழுவதும் 1,650 பறக்கும் படைகள்

ரூ.50,000க்கு மேல் எடுத்துச் சென்றால் உரிய ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் என மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

சென்னை:

தமிழகம் முழுவதும் ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அடுத்த மாதம் 19-ம் தேதி நடைபெறுகிறது.

இந்நிலையில், மாநில தேர்தல் ஆணையம் தேர்தல் நடத்தை விதிகள் தொடர்பான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறியுள்ளதாவது:

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்காக தமிழகம் முழுவதும் 1,650 தேர்தல் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. காலை, மாலை, இரவு என தனித்தனியாக 550 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. 

மேலும், அந்தந்த மாவட்டங்களில் தேவைக்கேற்ப பறக்கும் படைகளை அமைத்துக் கொள்ளலாம். பறக்கும் படையில் ஒரு செயற்பொறியாளர், இரு காவலர்கள், ஒரு காணொளி பதிவு செய்பவர் என மொத்தம் 4 பேர் இருப்பார்கள்.

மாநிலம் முழுவதும் போதை பொருட்கள், மது, ஆயுதங்கள் போன்றவற்றை எடுத்து சென்றால் பறிமுதல் செய்யப்படும்.

ரொக்கமாக ரூ.50,000க்கு மேல் எடுத்துச் சென்றால் உரிய ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். இல்லையென்றால் பறிமுதல் செய்யப்படும். அவ்வாறு பறிமுதல் செய்யப்பட்டவற்றை அரசு கருவூலத்தில் உடனடியாக ஒப்படைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.  

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »