Press "Enter" to skip to content

சூப்பர் சந்தையில் ஒயின் விற்க எதிர்ப்பு தெரிவித்து பிப். 14 முதல் அன்னா ஹசாரே உண்ணாவிரதம்

விவசாயிகளுக்காக இந்தத் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது என மாநில அரசுத்தரப்பு தெரிவித்துள்ளது.

மும்பை:

மகாராஷ்டிரா மாநிலத்தில் சூப்பர் மார்க்கெட்டுகளில் ஒயின் வகை மதுவை விற்பனை செய்ய அனுமதி அளித்து புதிய சட்டத்தை அம்மாநில அரசு கொண்டு வந்துள்ளது. அதன்படி, 1,000 சதுர அடிக்கும் மேல் பரப்பளவு கொண்ட சூப்பர் மார்க்கெட்களில் ஒயின் விற்பனை செய்யலாம். 

இதற்கு வருடத்திற்கு ரூ.5,000 கட்டணம் செலுத்தி உரிமம் பெற்றுக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளது. மாநில அரசின் இந்த உத்தரவுக்கு எதிர்க்கட்சியான பா.ஜ.க. கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

இந்நிலையில், சூப்பர் சந்தையில் ஒயின் விற்கும் மாநில அரசின் முடிவுக்கு சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மாநில அரசின் முடிவுக்கு எதிராக பிப்ரவரி 14-ம் தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் நடத்த உள்ளேன் என அவர் அறிவித்துள்ளார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »