Press "Enter" to skip to content

ஆப்கானிஸ்தானில் பயங்கரவாத குழுக்கள் சுதந்திரமாக செயல்படுகின்றன: ஐ.நா.எச்சரிக்கை

பயங்கரவாதிகளின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்த தலிபான் தலைமை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று
ஐ.நா. குறிப்பிட்டுள்ளது.

நியுயார்க்:

சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பிற்கு ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பால் ஏற்படும் அச்சுறுத்தல் மற்றும் அதை எதிர்கொள்ளும் உறுப்பு நாடுகள் தொடர்பான ஐ.நா. பொதுச் செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

சமீபகாலமாக வரலாற்றில் இல்லாத அளவுக்கு ஆப்கானிஸ்தானில் பயங்கரவாத குழுக்கள் அதிக சுதந்திரத்தை அனுபவித்து வருவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.நீண்ட கால போரினால் பாதிக்கப்பட்ட ஆப்கானில் வெளிநாட்டு பயங்கரவாதிகளின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்த தற்போதைய தலிபான் தலைமை எந்த நடவடிக்கை எடுத்ததற்கான  அறிகுறியும் இல்லை என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு, ஆப்கானிஸ்தானில் தன்னை நிலைநிறுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது, மேலும் அண்டை நாடுகளான மத்திய மற்றும் தெற்காசிய நாடுகளில் அந்த அமைப்பு விரிவடைகிறது என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஐ.எஸ்.அமைப்பின் வளர்ச்சி தலிபான்களால் அதன் முதன்மை அச்சுறுத்தலாக பார்க்கப்படுவதாகவும், இருப்பினும், குறைந்த எண்ணிக்கையிலான  பயங்கரவாதிகள் மட்டுமே ஆப்கானிஸ்தானுக்கு செல்கின்றனர் என்றும் ஐ.நா. பொதுச் செயலாளர் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »