Press "Enter" to skip to content

பாஜக அலுவலகத்தில் கல்லெண்ணெய் வெடிகுண்டு வீச்சு- காவல் துறை பாதுகாப்பு போடப்பட்டிருந்த நிலையில் துணிகரம்

பா.ஜனதா அலுவலகத்தில் காவல் துறை பாதுகாப்பு போடப்பட்டிருந்த நிலையில் மிகவும் துணிச்சலாக கல்லெண்ணெய் குண்டு வீசப்பட்ட சம்பவம் கட்சி நிர்வாகிகள் மற்றும் காவல் துறையினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை:

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு இன்னும் ஒரு வாரமே இருக்கும் நிலையில் தேர்தல் களம் களைகட்டி உள்ளது. அனைத்து கட்சித் தலைவர்களும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து வெளியேறி பா.ஜனதா தனித்து போட்டியிடுகிறது. அந்த கட்சி வேட்பாளர்களை ஆதரித்து மாநில தலைவர் அண்ணாமலை தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்.

இந்தநிலையில் தி.நகர் வைத்தியராமன் தெருவில் உள்ள பா.ஜனதா கட்சியின் மாநில தலைமை அலுவலகமான கமலாலயத்தில் கல்லெண்ணெய் குண்டுகள் வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பா.ஜனதா தலைமை அலுவலகத்தில் 24 மணிநேரமும் காவல் துறை பாதுகாப்பு போடப்பட்டு இருக்கும். துப்பாக்கி ஏந்திய காவலர்கள் சுழற்சி முறையில் பணியில் இருப்பார்கள். நேற்று இரவும் அதே போன்று காவல் துறைகாரர் ஒருவர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தார்.

இந்தநிலையில் நள்ளிரவு 1.30 மணியளவில் வாலிபர் ஒருவர் அங்கு மோட்டார் சைக்கிளில் வந்தார்.

பா.ஜனதா அலுவலகம் முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்திய அந்த வாலிபர் திடீரென தான் மறைந்து வைத்து இருந்த 3 கல்லெண்ணெய் குண்டுகளை எடுத்து சரமாரியாக பா.ஜனதா அலுவலகம் மீது வீசினார்.

இதில் 3 கல்லெண்ணெய் குண்டுகளும் அலுவலக வளாகத்திற்குள் விழுந்து ‘டமார், டமார்’ என்ற சத்தத்துடன் வெடித்து சிதறின.

கல்லெண்ணெய் குண்டுகள் வெடித்த போது அதில் இருந்து தீப்பிடித்தது. இதில் பா.ஜனதா அலுவலக வளாகத்தில் உள்ள சுவர்கள், தரை ஆகியவை லேசாக சேதம் அடைந்தன.

தீப்பிடித்ததால் சுவர்கள் மற்றும் தரையில் போடப்பட்டு இருந்த டைல்ஸ் ஆகியவை கருப்பு நிறத்தில் மாறின. இதற்கிடையே கல்லெண்ணெய் குண்டுகளை வீசிய நபர் தனது மோட்டார் சைக்கிளில் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார்.

பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறைகாரர் திடீரென ஒரு வாலிபர் வந்து கல்லெண்ணெய் வெடிகுண்டுகளை வீசியதைப் பார்த்து கடும் அதிர்ச்சி அடைந்தார். அவர் கல்லெண்ணெய் குண்டுகளை வீசிய வாலிபர் யார் என்று பார்த்து பிடிக்க முயற்சி செய்த நிலையில் அந்த நபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

இதற்கிடையே பக்கத்து வீடுகளில் இருந்த பாதுகாவலர்களும், அக்கம் பக்கத்தினரும் பா.ஜனதா அலுவலகம் நோக்கி ஓடி வந்தனர்.

இதுபற்றி தகவல் கிடைத்ததும் நள்ளிரவில் பா.ஜனதா நிர்வாகிகளும், கட்சி அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். பா.ஜனதா தேர்தல் பொறுப்பாளரான கராத்தே தியாகராஜனும் விரைந்து வந்தார். போலீசாரும் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்கள்.

கல்லெண்ணெய் குண்டு வீசப்பட்ட இடத்தில் தடயங்களை சேகரிப்பதற்காக தடயவியல் நிபுணர்களும் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் பா.ஜனதா அலுவலக வளாகத்தில் சிதறிக் கிடந்த கல்லெண்ணெய் குண்டு பாகங்களை சேகரித்து அதனை ஆய்வு செய்தனர்.

அதில் இருந்த தடயங்களையும் சேகரித்தனர். கல்லெண்ணெய் குண்டாக பயன்படுத்தப்பட்ட கண்ணாடி பாட்டில் துண்டுகள் ஆங்காங்கே சிதறிக் கிடந்தன. அவற்றையும் தடயவியல் நிபுணர்கள் சேகரித்தனர்.

தடயவியல் சோதனை முடிந்த பிறகு பாதுகாப்பு பணிக்கு வந்த காவல் துறையினர் கல்லெண்ணெய் குண்டு வீசப்பட்ட இடத்தை தண்ணீர் ஊற்றி கழுவி சுத்தப்படுத்தினார்கள்.

பா.ஜனதா அலுவலகத்தில் திரண்ட கட்சி நிர்வாகிகள் நடந்த சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர்.

இந்தநிலையில் இன்று காலை 9 மணியளவில் பா.ஜனதா அலுவலகம் முன்பு நிர்வாகிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். அப்போது கல்லெண்ணெய் குண்டு வீசிய நபர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோ‌ஷம் எழுப்பினார்கள்.

இதன் பிறகு நிர்வாகிகள் ஒன்றுகூடி அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி ஆலோசனையும் நடத்தினார்கள்.

பாஜக அலுவலகம்

பா.ஜனதா அலுவலகத்தில் காவல் துறை பாதுகாப்பு போடப்பட்டிருந்த நிலையில் மிகவும் துணிச்சலாக கல்லெண்ணெய் குண்டு வீசப்பட்ட சம்பவம் கட்சி நிர்வாகிகள் மற்றும் காவல் துறையினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த சம்பவத்தை தொடர்ந்து பா.ஜனதா அலுவலகத்தில் கண்காணிப்பை அதிகப்படுத்த உயர் காவல் துறை அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர். இதன்படி பா.ஜனதா அலுவலகம் முன்பு இன்று காலை முதல் பலத்த காவல் துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »