Press "Enter" to skip to content

ஓட்டலில் உணவு பரிமாறும் பட்டு சேலை அணிந்த ரோபோ

மைசூருவில் பிரபலமான ஓட்டலில் வாடிக்கையாளர்களுக்கு உணவு பரிமாற ரோபோ வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

பெங்களூரு:

இன்றைய நவீன காலத்தில் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியால் மனித வேலைப்பாடுகள் குறைந்து மின்சாதன பயன்பாடுகள் அதிகரித்துவிட்டன. மனித உருவ வடிவிலான ரோபோக்கள் பல துறைகளில் பணியாற்றி வருகின்றன.

அந்த வகையில் மைசூருவில் பிரபலமான சித்தார்த்தா ஓட்டலில் வாடிக்கையாளர்களுக்கு உணவு பரிமாற ரோபோ வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த ரோபோ பட்டு சேலையுடன் வந்து வாடிக்கையாளர்களுக்கு உணவு கொண்டு வருகிறது.

என்னதான் அறிவியல் வளர்ச்சி பிரமிக்கவைத்தாலும், நாம் கேட்டதும் கொண்டு வரும் ஓட்டல் ஊழியர்கள் போல் ரோபோவால் ஓடோடி வர முடியாது என்றும், இன்முகத்துடன் வரவேற்கும் ஓட்டல் ஊழியர்கள் உணவு பரிமாற இல்லாதது குறையாக உள்ளது என்றும் அங்கு வந்த வாடிக்கையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

ரூ.2.50 லட்சத்திற்கு இந்த ரோபோவை வாங்கியதாக ஓட்டல் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »