Press "Enter" to skip to content

பிரபல பாலிவுட் பாடகர்- இசையமைப்பாளர் பப்பி லஹிரி காலமானார்

மறைந்த பாடகர் பப்பி லஹிரியின் மறைவுக்கு பாலிவுட் திரையுலகம் இரங்கல் தெரிவித்து வருகிறது.

பாலிவுட் திரையுலகில் 70-80களில் பல்வேறு திரைப்படங்களுக்கு பாடல் பாடியவர் பிரபல பாடகர் பப்பி லஹிரி (69). படங்களுக்கும் இசையமைத்துள்ளார். 1980-90ம் ஆண்டுகளில் டிஸ்கோ இசையை பிரபலப்படுத்தியவர். இவர் கடைசியாக 2020-ம் ஆண்டில் வெளிவந்த பாகி3 படத்திற்காக ‘பங்காஸ்’ என்ற பாடலை பாடினார்.

பாடகர் என்ற அடையாளத்தை தவிர, அதிர்ஷ்டத்திற்காக அவர் கழுத்தில் அணியும் தங்க சங்கிலிகளும், கண்ணாடியும் ரசிகர்கள் மத்தியில் பரிச்சயமானது.

இந்நிைலையில் கடந்த சில ஆண்டுகளாக பப்பி லஹிரி பல்வேறு உடல்நலப் பிரச்சனையால் அவதிப்பட்டு வந்துள்ளார்.  இதனால் ஒரு மாதமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்த அவர் கடந்த திங்கட்கிழமை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

இந்நிலையில், நேற்று நள்ளிரவு பப்பி லஹிரிக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதை அடுத்து மீண்டும் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு பப்பி லஹிரி சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

பாடகர் பப்பி லஹிரியின் மறைவுக்கு பாலிவுட் திரையுலகம் இரங்கல் தெரிவித்து வருகிறது.

இதையும் படியுங்கள்.. 5 ஆண்டு தீவிர காதல்- காதலர் தினத்தில் தம்பதியான திருநங்கைகள்

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »