Press "Enter" to skip to content

பாடகர் பப்பி லஹிரியின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்

மறைந்த பாடகர் பப்பி லஹிரியின் மறைவுக்கு பாலிவுட் திரையுலகத்தினர் மற்றும் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றன.

பாலிவுட் திரையுலகில் 70-80களில் பல்வேறு திரைப்படங்களுக்கு பாடல் பாடியவர் பிரபல பாடகர் பப்பி லஹிரி (69). படங்களுக்கும் இசையமைத்துள்ளார். 1980-90ம் ஆண்டுகளில் டிஸ்கோ இசையை பிரபலப்படுத்தியவர். இவர் கடைசியாக 2020-ம் ஆண்டில் வெளிவந்த பாகி3 படத்திற்காக பங்காஸ் என்ற பாடலை பாடினார்.

பல்வேறு உடல்நலப் பிரச்சனையால் அவதிப்பட்டு வந்த பப்பி லஹிரி, கடந்த ஒரு மாதமாக மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்து நேற்று முன்தினம் வீடு திரும்பினார்.

இந்நிலையில், பப்பி லஹிரிக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டதை அடுத்து உயிரிழந்தார்.

பாடகர் பப்பி லஹிரியின் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

 இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

பாடகர் பப்பி லஹிரியின் இசை அனைத்தையும் உள்ளடக்கியது. பல்வேறு உணர்வுகளை அழகாக வெளிப்படுபத்தியது. மக்கள் அவரது படைப்புகள் மூலம் தலைமுறை தலைமுறையாக தொடர்புபடுத்திக் கொள்ள முடியும். அவரது மறைவு வருத்தம் அளிக்கிறது.
 
இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.

இதையும் படியுங்கள்.. ஓட்டலில் உணவு பரிமாறும் பட்டு சேலை அணிந்த ரோபோ

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »