Press "Enter" to skip to content

தமிழகத்தில் 2 ஆண்டுகளுக்கு பிறகு மழலையர் பள்ளிகள் மீண்டும் திறப்பு

தமிழகத்தில் மழலையர் பள்ளிகளை திறந்து கொள்ள தமிழக அரசு அனுமதி அளித்துள்ள நிலையில் பெரும்பாலான பள்ளிகள் இன்று திறக்கப்பட்டன.

சென்னை:

தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்றை தடுப்பதற்காக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. நோய்த் தொற்று குறைந்துள்ள நிலையில், தற்போது பல்வேறு தளா்வுகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் இன்று முதல் பெரும்பாலான கட்டுப்பாடுகளுக்கு அளிக்கப்பட்ட தளர்வுகள் அமலுக்கு வந்துள்ளன.

அதன்படி, கடந்த இரண்டு ஆண்டுகளாக மூடப்பட்டிருந்த 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நர்சரி, விளையாட்டுப் பள்ளிகள், மழலையா் காப்பகங்கள், தொடக்கப்பள்ளிகள் ஆகியவற்றில் நடத்தப்படும் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் இன்று திறக்கப்பட்டுள்ளன.

தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பள்ளிகளை நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

முன்னதாக பேட்டியளித்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், மழலையர் பள்ளிகளில் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு முகக்கவசம் கட்டாயமில்லை என்றார்.

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »