Press "Enter" to skip to content

நெல்லை மாவட்டத்தில் இன்று மாலை மு.க.ஸ்டாலின் பிரசாரம்

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் மூலம் அந்தந்த பகுதியில் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள், ஆதரவாளர்கள் உற்சாகம் அடைந்து வருகிறார்கள்.

நெல்லை:

இறுதி கட்ட பிரசாரமாக மு.க.ஸ்டாலின் இன்று காணொலி காட்சி மூலம் நெல்லை மத்திய மாவட்டம், மற்றும் நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களிடம் பேசுகிறார்.

நெல்லை மத்திய மாவட்டத்தில் மாநகராட்சி பகுதியில் பாளை, மேலப்பாளையம், என்.ஜி.ஓ. காலனி, தச்சை, பேட்டை, டவுன் ஆகிய 6 பகுதிகளிலும் சங்கர் நகர் பேரூராட்சி பகுதியிலும் என மொத்தம் 7 இடங்களில் பெரிய எல்.இ.டி. திரையில் இன்று பிற்பகல் 3 மணி அளவில் காணொலி காட்சி மூலம் மு.க.ஸ்டாலின் பேசுகிறார்.

நெல்லை கிழக்கு மாவட்டத்தில் சிங்கை, அம்பை, களக்காடு ஆகிய நகராட்சிகளிலும், சேரன்மகாதேவி, வீரவநல்லூர், திசையன் விளை, வள்ளியூர், பணகுடி உள்ளிட்ட 15 பேரூராட்சி பகுதிகளில் 150 இடங்களில் எல்.இ.டி. திரையில் மு.க.ஸ்டாலின் பிரசாரம் காணொலியில் ஒளிபரப்பப்படுகிறது.

மு.க.ஸ்டாலின் பிரசாரத்தை மத்திய மாவட்டத்தில் 75 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களும், கிழக்கு மாவட்டத்தில் 1.25 லட்சத்திற்கும் அதிகமான பேரும் என சுமார் 2 லட்சம் பேர் பார்க்க மத்திய மாவட்ட செயலாளர் அப்துல் வகாப் எம்.எல்.ஏ., கிழக்கு மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன் ஆகியோர் ஏற்பாடு செய்துள்ளனர்.

இந்த பிரசாரத்தில் மு.க.ஸ்டாலின் ‘உள்ளாட்சியிலும் தொடரட்டும் நம்மாட்சி’ என்ற தலைப்பில் தி.மு.க. ஆட்சியின் 8 மாத சாதனைகளை எடுத்து கூறியும், தேர்தல் அறிக்கையில் கூறியபடி கொரோனா நிவாரண நிதி வழங்கியது, பால், கல்லெண்ணெய் விலையை குறைத்தது. பெண்களுக்கு பேருந்தில் இலவச பயணம் செய்ய அனுமதி வழங்கியது. 5 பவுனுக்கு உள்ளிட்ட நகைக்கடன்களை ரத்து செய்ய நடவடிக்கை எடுத்து வருவது என்று பல்வேறு சாதனைகளையும், வேலைவாய்ப்பு வழங்க பல்வேறு தொழிற்சாலைகள் கொண்டு வருவதையும் பற்றி பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

முதல்-அமைச்சரின் பிரசாரம் மூலம் அந்தந்த பகுதியில் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள், ஆதரவாளர்கள் உற்சாகம் அடைந்து வருகிறார்கள்.

நெல்லை மாவட்டத்திலும் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை மு.க.ஸ்டாலின் ஆதரித்து இன்று காணொலி காட்சியில் பிரசாரம் செய்வதன் மூலம் தொண்டர்கள் மத்தியில் அதிக எழுச்சி ஏற்படும் என்று கூறப்படுகிறது.

காணொலி காட்சி மூலம் பிரசாரம் நடைபெறும் இடங்களில் அனைவரும் முககவசம் அணிந்து கொரோனா தொற்று விதிமுறைகளின்படி பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்தந்த பகுதிகளில் காவல் துறை பாதுகாப்பும் போட உத்தரவிடப்பட்டு உள்ளது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »