Press "Enter" to skip to content

நகரத்திலும் வார்டு சபை அமைய வேண்டும்: கட்சியின் 5-ம் ஆண்டு துவக்க விழாவில் கமல்ஹாசன் பேச்சு

டிராபிக்கை நிறுத்தி வைப்பது நமது வேலை இல்லை. சரியாக வேலை செய்யாத அரசை ஸ்தம்பிக்க வைத்து நிற்க வைப்பதுதான் நம் வேலை என கமல்ஹாசன் தெரிவித்தார்.

சென்னை:

மக்கள் நீதிமய்யம் கட்சியின் 5-ம் ஆண்டு துவக்க விழா, ஆழ்வார்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.

அப்போது மக்கள் நீதிமய்யம் கட்சியின் தலைவர் பேசினார். அவர் பேசும்போது,

கட்சியில் இருந்து சிலர் வெளியேறிருக்கிறார்கள்.  அவர்கள் செல்லவில்லை. அனுப்பி வைத்திருக்கிறோம் என ஞாபகப் படுத்துகிறோம். சிலபேர் இந்த வியாபாரம் நமக்கு கட்டுப்பிடி ஆகாது. இது வியாபாரமே இல்லை. இங்கு வந்து சேர்ந்து விட்டோமே, கட்டுப்பிடி ஆகாது என உணர்ந்து வியாபாரிகள் எங்கே இருக்க வேண்டுமோ, அங்கு போய் விட்டார்கள்.

வணிகம் தெரிந்தவர்கள் அப்படிதான் செய்வார்கள். நான் வியாபாரம் செய்ய வரவில்லை. தமிழகத்தை சீரமைக்க வந்திருக்கிறோம். நான் ஒவ்வொரு முறையும் மார்தட்டி எழுப்பும் கோஷம் அதுதான்.  அதைத்தான் செய்து கொண்டிருக்கிறோம்.

களத்தில் போராடவில்லையே…

டிராபிக்கை நிறுத்தி வைப்பது நமது வேலை இல்லை. சரியாக வேலை செய்தாத அரசை ஸ்தம்பிக்க வைத்து நிற்க வைப்பதுதான் நம் வேலை. அதை நேற்று செய்திருக்கிறோம். அறவழியில் செய்திருக்கிறோம். கைது செய்திருப்பார்கள் என்று எதிர்பார்த்தேன். அப்படி செய்திருந்தால் அது போராட்டம் நடத்தியவர்களுக்கு கிடைத்த பெருமையாக இருக்கும். இன்றும் அந்த வாய்ப்பு அவர்களுக்கு இருக்கிறது. நான் செல்கிறேன் அங்கே.

எதற்கும் துணிந்தவர்கள் அல்ல. இதற்கென்று துணிந்தவர்கள். எதற்கும் துணிந்தவர்கள் அவர்கள். கிராம சபை போன்ற நகரத்திலும் வார்டு சபை அமைய வேண்டும் என 2010-ல் அரசாணை உள்ளது. அடுக்குமாடி குடியிருப்புகளில் சொசைட்டி அமைத்து தங்களது வேலைகளை பூர்த்தி செய்து கணக்கு பார்ப்பதுபோல், நகரங்களின் தெருக்களிலும் அது அமைய வேண்டும்.

இவ்வாறு கமல்ஹாசன் பேசினார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »