Press "Enter" to skip to content

ரஷ்யாவுக்கு அமெரிக்கா, பிரான்ஸ் கண்டனம்

உக்ரைன் அரசுக்கு எதிரான கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிகளை ரஷ்யா சுதந்திரமான நகரங்களாக அங்கீகரித்தற்கு அமெரிக்கா, பிரான்ஸ், உக்ரைன் நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் கூறும்போது, ‘புதினின் இந்த அறிவிப்பை நாங்கள் கடுமையாக கண்டிக்கிறோம். இது உக்ரைனின் இறையாண்மை மற்றும் பிராந்தியத்தின் ஒருமைப்பாடு மீதான தெளிவான தாக்குதல் ஆகும்.

பிரான்ஸ் அதிபர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் அதிபர் மெக்ரான் ரஷ்யாவின் அறிவிப்புக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக விவாதிக்க ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் கூட்டத்தை கூட்ட வலியுறுத்தினார்.

ரஷ்யா மீது ஐரோப்பா பொருளாதார தடைகளை விதிக்கவும் கேட்டுக்கொண்டுள்ளார். இந்த ஒருதலைபட்சமான மீறல் ரஷ்யாவின் சர்வதேச உறவை மீறுவது ஆகும்.

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறும்போது, கிளர்ச்சியாளர் பகுதிகளை ரஷ்யா அங்கீகரிப்பதன் மூலம் போர் பதற்றத்தை தணிக்க நடத்தப்படும் அமைதி பேச்சுவார்த்தை முயற்சிகளை ரஷ்யா அழித்துள்ளது. ஆனால் எங்கள் நிலத்தை விட்டுக் கொடுக்க மாட்டோம்’ என்றார். அதேபோல் ரஷ்யாவை ஜெர்மனியும் கண்டித்துள்ளது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »