Press "Enter" to skip to content

சேலம்-நாமக்கல் மாவட்டங்களில் அ.தி.மு.க. கோட்டையை தகர்த்த தி.மு.க.

நாமக்கல் மாவட்டத்தில் நாமக்கல் நகராட்சியில் இதுவரை 3 வார்டுகளில் தி.மு.க. வெற்றி பெற்றுள்ளது.

சேலம்:

சேலம், நாமக்கல் மாவட்டங்களில் நடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிக இடங்களில் தி.மு.க. வெற்றி பெற்றுள்ளது. சேலம் மாவட்டத்தில் அ.தி.மு.க. கோட்டையாக கருதப்பட்ட பல்வேறு இடங்களில் தி.மு.க. வெற்றி வாகை சூடியுள்ளது. சேலம் மாநகராட்சியில் இதுவரை 12 வார்டுகளில் தி.மு.க. வெற்றி பெற்றுள்ளது. ஒரு இடத்தில் மட்டுமே அ.தி.மு.க.வுக்கு வெற்றி கிடைத்துள்ளது.

இதேபோல் மாவட்டத்தில் உள்ள மேட்டூர், ஆத்தூர், நரசிங்கபுரம், எடப்பாடி, இடங்கணசாலை, தாரமங்கலம் ஆகிய 6 நகராட்சிகளிலும் அதிகமான வார்டு கவுன்சிலர்களாக தி.மு.க.வினர் வெற்றி பெற்றுள்ளனர்.

நாமக்கல் மாவட்டத்தில் நாமக்கல் நகராட்சியில் இதுவரை 3 வார்டுகளில் தி.மு.க. வெற்றி பெற்றுள்ளது. அதிக வார்டுகளில் தி.மு.க. முன்னிலையில் உள்ளது.

திருச்செங்கோடு நகராட்சியில் தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் சமநிலையில் வெற்றிபெற்று வருகின்றன. இதுதவிர குமாரபாளையம், பள்ளிபாளையம் நகராட்சியிலும் இதுவரை முடிவுகள் வெளியானதில் தி.மு.க. அதிக இடங்களை கைப்பற்றி உள்ளது.

இதேபோல் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகளிலும் அதிக வார்டுகளில் தி.மு.க.வினர் வெற்றி பெற்றுள்ளனர். கொங்கு மண்டலத்தில் சேலம் மாவட்டம் அ.தி.மு.க. கோட்டையாகவும், நாமக்கல் மாவட்டத்தின் சில தொகுதிகள் அ.தி.மு.க.வின் செல்வாக்கு பெற்ற இடங்களாக கருதப்பட்டன. அந்த பகுதிகளிலும் தற்போது தி.மு.க. அதிகளவில் வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »