Press "Enter" to skip to content

ஆவடி மாநகராட்சியில் அமைச்சர் நாசர் மகன் வெற்றி

ஆவடி மாநகராட்சி தேர்தலில் 4-வது வார்டில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட அமைச்சர் நாசரின் மகன் ஆசிம்ராஜா வெற்றி பெற்றுள்ளார்.

சென்னை:

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 19-ந்தேதி நடைபெற்றது. இத்தேர்தலில் திமுக மற்றும் அதன் கூட்டணி, அதிமுக, பாஜக, பாமக, அமமுக, தேமுதிக, நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகள் போட்டியிட்டன. இதனால் தேர்தல் களத்தில் அனல் பறந்தது.

இத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகிறது.  இதில் ஆவடி மாநகராட்சி தேர்தலில் 4-வது வார்டில் அமைச்சர் நாசரின் மகன் ஆசிம்ராஜா தி.மு.க. சார்பில் போட்டியிட்டார்.

இவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட அ.தி.மு.க. வேட்பாளரை 626 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

ஆசிரம்ராஜா (தி.மு.க.)- 755

ரமேஷ் (அ.தி.மு.க.)-129

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »