Press "Enter" to skip to content

ரஷியாவுக்கு எதிரான போரில் நாங்கள் தனித்து விடப்பட்டுள்ளோம் – உக்ரைன் அதிபர் உருக்கம்

ரஷியாவுக்கு எதிரான முழு ராணுவத்தையும் திரட்டும் பணிகளை விரைந்து முடிக்குமாறும் ராணுவ அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.

கீவ்:

உக்ரைன் மீது ரஷியா தொடுத்துள்ள போரால் அங்கு கடும் பதற்றம் காணப்படுகிறது. ரஷியா நடத்திய தாக்குதலில் இதுவரை பொதுமக்கள் மற்றும் ராணுவ வீரர்கள் மொத்தம் 137 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 316 பேர் படு காயமடைந்துள்ளனர்.

ராணுவ நிலைகளை தாக்குவதாக கூறும் ரஷியா, உக்ரைன் மக்கள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. அவர்கள் மக்களைக் கொல்கிறார்கள். இது தவறானது மற்றும் ஒருபோதும் மன்னிக்க முடியாதது என உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், ரஷியாவுக்கு எதிரான போரில் நாங்கள் தனித்து விடப்பட்டுள்ளோம் என உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி உருக்கமுடன் தெரிவித்துள்ளார்.

மேலும், ரஷிய படைகளிடமிருந்து இருந்து நாட்டைப் பாதுகாக்க அனைத்துத் தரப்பு மக்களும் முன்வர வேண்டும். ரஷிய படைகளுக்கு எதிராக களமிறங்கும் அனைவருக்கும் ஆயுதங்கள் வழங்கப்படும் எனவும் அவர் அறிவித்துள்ளார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »