Press "Enter" to skip to content

முதல் நாள் போரில் 800 ரஷ்ய வீரர்களை வீழ்த்தியுள்ளோம் – உக்ரைன் பாதுகாப்புதுறை அறிவிப்பு

ஐரோப்பிய நாடுகளில் இரண்டாவது உலகப் போருக்கு பின்னர் மிகப்பெரிய தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

கீவ்:

உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து வருகிறது. தலைநகர் கீவை குறிவைத்து சரமாரி குண்டு வீச்சு, ஏவுகணை தாக்குதல் நடத்தி வருகிறது. முதல் நாள் போரில் உக்ரைன் படைவீரர்கள், பொதுமக்கள் என 137 பேர் பலியானதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

இதற்கிடையே, ரஷியாவின் தாக்குதலுக்கு உக்ரைன் அரசும் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்நிலையில், உக்ரைன் சார்பில் நடத்தப்பட்ட தாக்குதலில் 7 விமானங்கள், 6 உலங்கூர்திகள் மற்றும் 30-க்கும் கூடுதலான பீரங்கிகள் அழிக்கப்பட்டு விட்டன. ரஷிய தரப்பில் 800 வீரர்கள் உயிரிழந்து உள்ளனர் என அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சக துணை மந்திரி ஹன்னா மால்யார் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »