Press "Enter" to skip to content

உக்ரைனில் உள்ள இந்தியர்களை மீட்க அவசர கால மீட்புக் குழுக்கள் – தமிழக பாஜக தகவல்

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

உக்ரைனில் சிக்கியுள்ள தமிழக மாணவர்களுக்கு உதவும் வகையில்

தமிழக பாஜக சார்பில் அவசர கால தொடர்பு மையம் உருவாக்கப்பட்டுள்ளது. அந்த ஹெல்ப் லைன் மூலம் எனக்கு கிடைக்கும் தகவல்களை மத்திய அரசின் வெளியுறவுத்துறை அமைச்சக அலுவலகத்திற்கு அனுப்பிக் கொண்டே இருக்கிறோம்.

உக்ரைனில் சிக்கியுள்ள தமிழக மாணவர்கள் மற்றும் இதர தமிழர்களின் நிலைமைகளை விளக்கி, அவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதி உள்ளேன்.

இதன் தொடர்ச்சியாக மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் அவசர கால மீட்புக் குழுக்கள் உக்ரைன் நாட்டின் தரைவழி எல்லைகளுக்கு செல்கின்றன.

உக்ரைனில் உள்ள இந்தியர்கள் வெளியேற உதவுவதற்காக ஹங்கேரி, போலந்து, ஸ்லோவாக் குடியரசு மற்றும் ருமேனியாவில் உள்ள உக்ரைன் உடனான நில எல்லைக்களுக்கு இந்த குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளன.

சில உதவும் குழுக்களின் தொடர்பு எண்கள் வெளியிடப்பட்டுள்ளன. பொதுமக்கள் இதைப் பயன்படுத்தி உக்ரைனில் சிக்கி உள்ள தங்கள் குடும்பத்தினருக்கு தகவல் அனுப்ப கேட்டுக் கொள்கிறேன். 

ஹங்கேரி: உக்ரைனின் ஜஹோனி எல்லைக்கு செல்லும் அவசர கால மீட்பு அணி

1. எஸ். ராம்ஜி : மொபைல் +36305199944 வாட்ஸ்அப்: +917395983990

2. அங்கூர்: மொபைல் மற்றும் வாட்ஸ் அப் 36308644597

3. மோஹித் நாக்பால்: மொபைல் +36302286566 வாட்ஸ் அப் : +918950493059

போலந்து: உக்ரைன் உடனான கிரோகோவிக்  நில எல்லைக்கு செல்லும் அணி

1. பங்கஜ் கர்க் : மொபைல் +48660460814 / +48606700105

ஸ்லோவோக் குடியரசு: உக்ரைன் உடனான விஸ்னே நெமேக்கே நில எல்லைக்கு செல்லும் அணி

1. மனோஜ் குமோர் : மொபைல் +421908025212

2. இவான் கோசிங்கா : மொபைல்+421908458724

ருமனியோ: உக்ரைன் உடனான சுசேவா நில எல்லைக்கு தெல்லும் அணி

1. கௌஷுல் அன்சாரி : மொபைல் +40731347728

2.உத்தேஷ்ய பிரியதர்ஷி : மொபைல் +40724382287

3.ஆண்ட்ரா ஹரியோனோவ்: மொபைல் +40763528454

4. மரியஸ் சிமா : மொபைல்+40722220823

மேற்கூறிய எல்லைகளுக்கு அருகில் உக்ரைனில் உள்ள இந்தியர்கள்

உக்ரைனை விட்டு வெளியேற விரும்பினால், இந்த குழுக்களை தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »