Press "Enter" to skip to content

ரஷிய அதிபரின் சொத்துக்களை முடக்க அமெரிக்கா, பிரிட்டன் ஆதரவு

ஐரோப்பிய நாடுகளில் உள்ள புதினின் சொத்துக்களை முடக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பிரஸ்ஸல்ஸ்:

உக்ரைன் மீது தாக்குதல் நடத்த ரஷிய படைகளுக்கு உத்தரவிட்டுள்ள அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புதினுக்கு, அமெரிக்கா, பிரிட்டன், கனடா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. 

இந்த நிலையில், ஐரோப்பிய நாடுகளில் உள்ள புதினின் சொத்துக்களை முடக்க அமெரிக்காவும், ஐரோப்பிய யூனியன் கூட்டமைப்பும் 

ஒப்புதல் தெரிவித்துள்ளது. 

அதேபோல், ரஷிய வெளியுறவுத்துறை மந்திரி செர்ஜி லாவ்ரோவின் சொத்துக்களையும் முடக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. புதின் மற்றும் லாவ்ரோவுக்கு எதிராக பொருளாதாரத் தடைகளை விதிக்க நேட்டோ தலைவர்களுக்கு பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் ஆதரவு தெரிவித்துள்ளார். 

உக்ரைன் மீதான ஆக்கிரமிப்பிற்காக ரஷியாவிற்கு எதிரான பொருளாதாரத் தடைகளின்  ஒரு பகுதியாக புதின் மற்றும் லாவ்ரோவின் சொத்துகள் மீது  ஐரோப்பிய யூனியன் கருவூலத் துறை தடைகளை அறிவித்துள்ளது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »