Press "Enter" to skip to content

உக்ரைனில் உள்ள இந்தியர்கள் முன்னறிவிப்பின்றி எல்லைகளுக்குச் செல்லவேண்டாம் – மத்திய அரசு

ருமேனியா மற்றும் போலந்தில் இருந்து இந்தியர்களை அழைத்துவர 2 விமானங்கள் இயக்கப்பட உள்ளது என ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.

புதுடெல்லி:

உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து உள்ளதால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது. உக்ரைனில் சிக்கித் தவிக்கும் இந்திய மாணவர்களை பத்திரமாக மீட்டுக் கொண்டுவர வேண்டும் மத்திய அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில்,  உக்ரைனில் உள்ள இந்தியர்கள் எவ்வித முன் அறிவிப்பின்றி பிற நாட்டு எல்லைகளுக்குச் செல்ல வேண்டாம் என உக்ரைனில் உள்ள இந்திய தூதரகம் அறிவித்துள்ளது.

உக்ரைனின் மேற்கு நகரங்களில் அடிப்படை வசதிகள் உள்ளதால் தங்குவதற்கு பாதுகாப்பான சூழல் உள்ளது. தேவையற்ற நடமாட்டத்தை தவிர்த்து வீடுகளுக்கு உள்ளேயே பத்திரமாக இருக்க வேண்டும். 

எல்லை சோதனை சாவடிகளைப் பற்றி தெரியாமல் வெளியேற வேண்டாம். எல்லைப் பகுதிகளில் பதற்றமான சூழல் நிலவுவதால் இந்திய தூதரகம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »