Press "Enter" to skip to content

உக்ரைனை அனைத்து திசைகளிலும் முன்னேறி தாக்குங்கள்- ரஷிய ராணுவத்திற்கு உத்தரவு

உக்ரைன் தாக்குதலை நிறுத்தினால் உயர்மட்ட அளவில் பேச்சுவார்த்தைகளை நடத்த தயாராக இருப்பதாக ரஷிய அதிபர் புதின் கூறினார்.

மாஸ்கோ:

உக்ரைன் மீது ரஷிய படைகள் 3-வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. வான்வழி, கடல்வழி மற்றும் தரைவழி என மும்முனை தாக்குதலை நடத்துவதால் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. உக்ரைன் நாட்டின் ஏராளமான ராணுவ இலக்குகளை ரஷிய படைகள் தாக்கி அழித்துள்ளன. அதேபோல் உக்ரைன் தங்களை தற்காத்துக் கொள்ள, ரஷிய படைகளுக்கு பதிலடி கொடுத்து வருகிறது. 

போர் தீவிரமடைந்துள்ள நிலையில், உக்ரைன் தாக்குதலை நிறுத்தினால் உயர்மட்ட அளவில் பேச்சுவார்த்தைகளை நடத்த தயாராக இருப்பதாக ரஷிய அதிபர் புதின் கூறினார். ஆனால் பேச்சுவார்த்தைக்கான சூழ்நிலை தற்போது இல்லை.

இந்நிலையில், உக்ரைனை அனைத்து திசைகளிலும் முன்னேறி தாக்கும்படி ரஷிய ராணுவத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. போரை நிறுத்திவிட்டு பேச்சுவார்த்தைக்கு வர உக்ரைன் மறுத்துவிட்டதாக கிரெம்ளின் மாளிகை குற்றம்சாட்டிய  நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.

எனவே, இனி உக்ரைன் மீதான தாக்குதல் மேலும் தீவிரமடையும். தலைநகரை கைப்பற்றுவதற்கு கூடுதல் படையினர் வரவழைக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »