Press "Enter" to skip to content

உத்தர பிரதேசத்தில் ஐந்தாம் கட்ட வாக்குப் பதிவு தொடங்கியது

உள்ளூர் போலீசாருடன், துணை ராணுவப்படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

லக்னோ:

உத்தர பிரதேச சட்ட சபையில் மொத்தம் உள்ள 403 தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. இதுவரை 231 தொகுதிகளுக்கு 4 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்துள்ளது.  

இந்த நிலையில், இன்று 61 தொகுதிகளுக்கு, 5வது கட்டமாக வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது.

மொத்தம் 692 வேட்பாளர்கள் இன்றைய தேர்தலில் களம் காண்கின்றனர். 12 மாவட்டங்களில் நடைபெறும் இந்த தேர்தலில் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப் பதிவு நடைபெறுகிறது.

அமேதி, ரேபரேலி, சுல்தான்பூர், சித்ரகூட், பிரதாப்கர், பிரயாக்ராஜ், அயோத்தி மற்றும் கோண்டா உள்ளிட்ட முக்கிய தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 

2 கோடியே 24 லட்சம் வாக்காளர்கள், இன்றைய வாக்குப்பதிவில் பங்கேற்றுள்ளனர். தேர்தல் நடைபெறும் பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டுள்ளது. 

உள்ளூர் போலீசாருடன், துணை ராணுவப்படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »