Press "Enter" to skip to content

செல்ல நாய்க்குட்டியை பிரிய மனமின்றி உக்ரைனில் இருந்து வெளியேற இந்திய மாணவர் மறுப்பு

உக்ரைனில் இருந்து இந்திய மாணவர்கள் வெளியேறி வருகிறார்கள். இந்தநிலையில் நாய்க்குட்டியை பிரிந்து வர மனம் இல்லாததால் இந்திய மாணவர் ஒருவர் நாடு திரும்ப மறுத்துவிட்டார்.

உக்ரைன்:

கிழக்கு உக்ரைனில் உள்ள கார்கீவ் தேசிய பல்கலைக் கழகத்தில் சாப்ட்வேர் என்ஜினீயரிங்கில் 3-ம் ஆண்டு படிக்கும் ரி‌ஷப்கவுசிக் என்ற மாணவர், தெருவில் இருந்து மீட்கப்பட்ட ஒரு நாய்க்குட்டியை வாங்கி வளர்த்து வருகிறார்.

இந்திய மாணவர்கள் பலர் நாடு திரும்பி வரும் நிலையில் ரி‌ஷப்கவுசிக் தனது வளர்ப்பு நாய்க்குட்டியுடன் இந்தியா திரும்ப விரும்பினார். ஆனால் அவருக்கு நாய்க்குட்டியை உடன் அழைத்து செல்ல அனுமதி கிடைக்கவில்லை.

இதனால் அவர் இந்தியா திரும்ப மறுத்துள்ளார். இது குறித்து ரி‌ஷப்கவுசிக் கூறியதாவது:-

‘மகிபூ’ என்று பெயரிடப்பட்ட எனது செல்ல நாய்க்குட்டியுடன் இந்தியா திரும்ப அனுமதி கிடைக்கவில்லை. இதனால் நாய்க்குட்டியை இங்கேயே விட்டுவர எனக்கு மனமில்லை. அதை நான் செய்யவும் மாட்டேன்.

இங்கே இருப்பது ஆபத்தானது என்பதை நான் அறிவேன். ஆனாலும் நாய்க்குட்டியை கைவிட என்னால் முடியாது. அதை நான் கைவிட்டு விட்டு நாடு திரும்பி விட்டால், நாய்க் குட்டியை யார் பார்த்துக் கொள்வார்கள்?

நான் கார்கீவ் நகரில் இருந்தேன். அதிர்ஷ்டவசமாக அங்கு தாக்குதல் நடப்பதற்கு ஒருநாள் முன்பாகதான் தலைநகர் கீவ்வுக்கு சென்றேன்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »