Press "Enter" to skip to content

புதின் புத்திசாலி என்பதில் பிரச்சினையில்லை: டொனால்டு டிரம்ப்

உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் நடத்தி வரும் நிலையில், அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டிரம்ப், பைடன் மீது விமர்சனம் வைத்துள்ளார்.

உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் நடத்தி வருகிறது. ரஷியா போர் தொடுக்க இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டதும், அமெரிக்கா போன்ற நாடுகள் நேட்டோ படைகளை உக்ரைனுக்கு ஆதரவாக அனுப்பமாட்டோம். அமெரிக்க ராணுவம் போரில் தலையிடாது என்றார்.

ஆனால், ரஷியா மீது கடுமையான பொருளாதார நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. ஐரோப்பிய நாடுகளுக்கும் ரஷியா மீது தடைகளை விதித்து வருகிறது. பல நாடுகள் ரஷியா தங்களது வான்வெளியை பயன்படுத்த தடைவிதித்துள்ளது.

இந்த நிலையில் உக்ரைனை மீது ரஷியா தாக்குதல் நடத்தி வருவதும், உலகத் தலைவர்கள் அமைதி காத்து வருவது குறித்து டொனால்டு டிரம்ப் கருத்து தெரிவித்தள்ளார்.

நேற்று புளோரிடா மாநிலம் ஒர்லாண்டோவில் பேசிய டொனால்டு டிரம்ப் ‘‘அனைவரும் புரிந்துகொண்டபடி, அமெரிக்க தேர்தலில் முறைகேடு நடைபெறாமல் இருந்திருந்தால், இதுபோன்று பயங்கரமான பேரழிவு நிகழ்ந்திருக்காது.

ரஷியாவை துண்டு துண்டாக்கியிருக்க வேண்டும். இல்லையெனில், குறைந்த பட்சம் உளவியல் ரீதியாக தாக்குதலுக்கு உள்ளாக்கி  சண்டைக்கு முற்றுப்புள்ளி வைப்பதைவிட, நேட்டோ நாடுகள் பொருளாதாரத்தடைகள் விதித்திருப்பது புத்திசாலித்தனம் அல்ல.

புதின் புத்திசாலி என்பதில் பிரச்சினை இல்லை. அவர் புத்திசாலிதான். ஆனால், உண்மையான பிரச்சினையே, நமது தலைவர்கள் ஊமையாக இருப்பதுதான்’’ என்றார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »