Press "Enter" to skip to content

போரை நிறுத்துமாறு புதினிடம் நாம் கேட்க முடியுமா?: உச்சநீதிமன்றம் தலைமை நீதிபதி

உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட வேண்டும் என்ற மனு மீதான விசாரணையின்போது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி இவ்வாறு கருத்து தெரிவித்தார்.

உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் நடத்தி வருகிறது. கீவ், கார்கிவ் நகரங்களில் இந்தியர்கள், இந்தி மாணவர்கள் சிக்கித் தவித்து வருகிறார்கள். இதில் கீவ் நகரில் இருந்து அனைத்து இந்தியர்களும் வெளியேற்றப்பட்டு அண்டை நாடு எல்லைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். அங்கிருந்து விமானங்கள் மூலம் இந்தியா அழைத்து வரப்படுகிறார்கள்.

ஆனால், கார்கிவ் நகரில் இருந்து இந்தியர்களை வெளியேற்றுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கார்கிவ் நகரை பிடிக்க ரஷியா தாக்குதலை அதிகப்படுத்தியதால் மாணவர்கள், இந்தியர்கள் வெளியேறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எப்படியாவது தொடர் வண்டிகளை பிடித்து மேற்கு பகுதிகளுக்கு வந்துவிட இந்திய தூதுரகம் அறிவுறுத்தியுள்ளது.

ஐ.நா. சபையில் மூன்று முறை உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்ததற்கு எதிராக வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. மூன்று முறையும் இந்தியா வாக்கெடுப்பை புறக்கணித்தது. இதனால் இந்திய மாணவர்கள் உக்ரைனியர்களால் தாக்கப்பட்டு வருகிறார்கள்.

இதற்கிடையே உக்ரைனில் சிக்கிய இந்தியர்களை மத்திய அரசு உடனடியாக மீட்டு இந்தியாவுக்கு அழைத்து வர துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வற்புறுத்தப்பட்டு வருகிறது. சமூக வலைத்தளங்களில் உச்சநீதிமன்றம் தலைமை நீதிபதி என்ன செய்து கொண்டிருக்கிறார்? போன்ற கருத்துகளும் பரவின.

இந்த நிலையில் உச்சநீதிமன்றத்தில்  உக்ரைனில் இருந்து இந்தியர்களை மீட்க நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட வேண்டும் என்று மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு மீதான விசாரணையின்போது, உச்சநீதிமன்றம் தலைமை நீதிபதி ‘‘சமூக வலைத்தளங்களில் நான் சில காணொளிக்கள் பார்த்தேன். இதில் உச்சநீதிமன்றம் தலைமை நீதிபதி என்ன செய்து கொண்டிருக்கிறார் என சொல்லப்படுகிறது. உக்ரைனுக்கு எதிராக ரஷியா நடத்தி வரும் போரை நிறுத்தும்படி நான் புதினுக்கு உத்தரவு பிறப்பிக்க முடியுமா?’’ என்றார்.

மேலும், உக்ரைனில் சிக்கியுள்ள மாணவர்களுக்காக நாங்கள் அனுதாபம் தெரிவிக்கிறோம். மத்திய அரசு மாணவர்களை மீட்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இன்றும் என்ன செய்யலாம் என்பது குறித்து அட்டார்னி ஜெனரலிடம் கேட்போம்’’ என்றார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »