Press "Enter" to skip to content

உக்ரைன் செர்னிஹிவ் பகுதியில் உள்ள எண்ணெய் கிடங்கில் ரஷிய படைகள் தாக்குதல்

கீவ், கார்கீவ் நகர்களைத் தொடரந்து செர்னிஹிவ் பகுதியை குறிவைத்து ரஷியா பயங்கர தாக்குதலை நடத்தி வருகிறது.

உக்ரைன்-  ரஷியா இடையேயான போர்  நீடித்து வரும் நிலையில், தொடர்ந்து அங்குள்ள முக்கிய நகரங்களில் பதற்றமான சூழல் காணப்படுகிறது. போர் காரணமாக உக்ரைனில் இருந்து வெளியேறுபவர்களின் எண்ணிக்கை விரைவில் 10 லட்சத்தை எட்டும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

கீவ், கார்கீவ் நகர்களைத் தொடரந்து செர்னிஹிவ் பகுதியை குறிவைத்து ரஷியா பயங்கர தாக்குதலை நடத்தி வருகிறது. செர்னிஹிவ் பகுதியில் உள்ள எண்ணெய் கிடங்கில் ரஷிய படைகள் தாக்குதலை நடத்தியது.  இதில் எண்ணெய் கிடங்கு தீப்பற்றி கொளுந்துவிட்டு எரிகிறது. இதனால் அப்பகுதியில் கரும்புகை சூழ்ந்துள்ளது. இந்த காட்சி காண்பவர்களை பதற்றமடைய வைத்துள்ளது.

இதையும் படியுங்கள்.. குவாட் அமைப்பு உச்சி மாநாடு: மோடி-ஜோபைடன் உள்பட 4 நாட்டு தலைவர்கள் ஆலோசனை

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »