Press "Enter" to skip to content

உக்ரைனின் அணுமின் நிலையத்தை கைப்பற்றியது ரஷிய படைகள்- 3 வீரர்கள் பலி

சபோரோஷியா அணுமின் நிலையம் வெடித்தால் அது செர்னோபில் அணுஉலை பாதிப்பை விட 10 மடங்கு அதிகமாக இருக்கும் என்று, உக்ரைன் வெளியுறவு மந்திரி டிமிட்ரோ குலேபா எச்சரித்திருந்தார்.

உக்ரைன் மீது ரஷிய படைகள் நடத்தி வரும் தாக்குதல் 9-வது நாளாக நீடிக்கும் நிலையில், தெற்கு உக்ரைனின் எனர்ஹோடர் நகரில் உள்ள சபோரோஷியா அணுமின் நிலையம் மீது இன்று அதிகாலை ரஷிய படைகள் நேரடியாக தாக்குதல் நடத்தின.

இதில், அணுமின் நிலையத்தில் உள்ள ஆறு உலைகளில் ஒன்று தீப்பிடித்து எரிந்தது. அந்த அணு உலை புதுப்பிக்கப்பட்டு இயங்கவில்லை என்றாலும் அதன் உள்ளே அணு எரிபொருள் உள்ளதாக கூறப்படுகிறது. அணு மின் நிலையம் அமைந்துள்ள பகுதியில் கடும் புகைமூட்டம் காணப்பட்ட நிலையில் உக்ரைன் வீரர்கள் பின்னர் தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

உக்ரைன் நாட்டிற்கு 25 சதவீத மின் விநியோகத்தை வழங்கும் சபோரோஷியா,  ஐரோப்பாவின் மிகப் பெரிய அணுமின் நிலையமாக கருதப்படுகிறது. சபோரோஷியா  வெடித்தால் அது செர்னோபில் அணுஉலை பாதிப்பை விட 10 மடங்கு அதிகமாக இருக்கும் என்று, உக்ரைன் வெளியுறவு மந்திரி டிமிட்ரோ குலேபா எச்சரித்திருந்தார்.

இந்நிலையில், சபோரோஷியா  அணுமின் நிலையத்தை முழுமையாக கைப்பற்றியதாக ரஷிய ராணுவம் அறிவித்துள்ளது. மேலும், அணுமின் நிலையம் மீது ரஷியா நடத்திய தாக்குதலில் 3 உக்ரைன் வீரர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் 2 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச அணுசக்தி முகமையின் இயக்குனர் ஜெனரல் ரஃபேல் மரியானோ கூறினார்.

இதையும் படியுங்கள்.. 9-வது நாளாக சண்டை நீடிப்பு- கீவ், கார்கிவ் நகரங்களில் ரஷிய படைகள் திணறல்

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »