Press "Enter" to skip to content

பயங்கரவாத நிதியுதவி விவகாரம் – சாம்பல் நிறப் பட்டியலில் நீடிக்கிறது பாகிஸ்தான்

பிரதமர் இம்ரான்கான் அளித்த பேட்டியில், பாகிஸ்தான் தடுப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டால் பணவீக்கத்தை அனுபவிப்போம், அது நமது பொருளாதாரத்தை அழிக்கும் என்றார்.

பாரிஸ்:

சர்வதேச நிதி நடவடிக்கை பணிக்குழுவின் செயல் திட்டத்தின் 27 நிபந்தனைகளையும் பாகிஸ்தான் பின்பற்றத் தவறிவிட்டது. கடனில் மூழ்கிய பாகிஸ்தான் நிதி நடவடிக்கை பணிக்குழுவின் சாம்பல் பட்டியலில் இருந்து வெளியேற முயன்ற முயற்சி தோல்வியடைந்தது.

இதனால் கடந்த 3 ஆண்டாக பாகிஸ்தான் சர்வதேச நிதி நடவடிக்கை பணிக்குழுவின் சாம்பல் பட்டியலில் உள்ளது. இது ஜூன் 2018-ல் சாம்பல் பட்டியலில் வைக்கப்பட்டது. அதன்பிறகு 27 நிபந்தனைகள் கொண்ட செயல் திட்டம் வழங்கப்பட்டது. அதை செயல்படுத்தத் தவறினால் தடுப்பு பட்டியலில் நீடிக்க  வழிவகுக்கும் என எச்சரிக்கை விடப்பட்டது.

கடும் பொருளாதார நெருக்கடி உள்ள நிலையில், சாம்பல் பட்டியல் நிலை காரணமாக உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம் மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி உள்ளிட்ட பலதரப்பு நிறுவனங்களிடமிருந்து நிதி உதவி பெறுவது பாகிஸ்தானுக்கு ஏற்கனவே கடினமாக உள்ளது.

இந்நிலையில், சர்வதேச நிதி நடவடிக்கை பணிக்குழு தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக பாகிஸ்தானை சாம்பல் நிறப் பட்டியலில் வைத்துள்ளது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »