Press "Enter" to skip to content

உக்ரைன் மீதான தாக்குதலுக்கு கண்டனம் – ரஷியாவில் விற்பனையை நிறுத்தியது மைக்ரோசாப்ட்

உக்ரைன் மீதான ரஷியாவின் இணைய தாக்குதல்களுக்கு எதிராக பாதுகாக்கும் முயற்சியில் நாங்கள் தொடர்ந்து செயலாற்றி வருகிறோம் என மைக்ரோசாப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

வாஷிங்டன்:

உக்ரைன் மீதான ரஷியாவின் படையெடுப்பிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மைக்ரோசாப்ட் நிறுவனம் ரஷியாவில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தயாரிப்புகள் மற்றும் சேவைகள் போன்ற அனைத்தையும் நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக, மைக்ரோசாப்ட் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது:

உக்ரைனில் இருந்து வரும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளைக் கண்டு வருத்தமடைகிறோம். ரஷியாவின் இந்த நியாமற்ற சட்ட விரோதமான ஆக்கிரமிப்பை கண்டிக்கிறோம். ரஷியாவில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தயாரிப்புகள் மற்றும் சேவைகள் போன்ற அனைத்து விதமான புதிய விற்பனைகளையும் நிறுத்தி வைக்கிறோம்.

உக்ரைன் மீதான ரஷியாவின் இணைய தாக்குதல்களுக்கு எதிராக பாதுகாக்கும் முயற்சியில் நாங்கள் தொடர்ந்து செயலாற்றி வருகிறோம். உக்ரைனில் உள்ள மக்களுக்கு உதவ நாங்கள் தொடர்ந்து வளங்களை திரட்டி வருகிறோம் என தெரிவித்துள்ளது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »