Press "Enter" to skip to content

அமெரிக்காவின் லாஸ்வேகாசில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் பலி

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் துப்பாக்கிச்சூடு சம்பவங்களைக் கட்டுப்படுத்த பல்வேறு நிர்வாக உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். ஆனாலும், துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் தொடர்கின்றன.

வாஷிங்டன்:

அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரம் பெருகி வருகிறது. போலீசாரை குறிவைத்தும், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் தொடர் துப்பாக்கி சூடு சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.

இதனால் துப்பாக்கி விநியோகத்தில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.  

இந்நிலையில், அமெரிக்காவின் நிவேடா மாகாணம் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் நேற்று இரவு கேளிக்கை விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 10-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

அந்த நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் மீது திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதில் ஒருவர் உயிரிழந்தார். மேலும், 7 பேர் காயமடைந்தனர்.

தகவலறிந்து சம்பவ இடம் விரைந்து சென்ற காவல் துறையினர் காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். துப்பாக்கிச் சூடு நடத்தியது யார் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.   

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »