Press "Enter" to skip to content

தமிழக காவல் துறையினருக்கு டி.ஜி.பி. சைலேந்திரபாபுவின் 7 அறிவுரைகள்

குற்றவாளிகளின் புகைப்படங்கள், காணொலிகள் ஆவணப்படுத்தப்பட வேண்டும். இவர்களை பிற்காலங்களில் அடையாளம் காண இது உதவியாக இருக்கும்.

சென்னை :

டி.ஜி.பி.சைலேந்திரபாபு அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் கூறி இருப்பதாவது:-

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அமைதியாக, எவ்வித அசாம்பாவித சம்பவங்கள் இன்றி முடிந்துள்ளது. இதற்காக தமிழக காவல்துறையினருக்கு பாராட்டுகள்.

அடுத்து காவல்துறையினர் தீவிரமாக செயல்படுத்த வேண்டிய கீழ்கண்ட பணிகள் உள்ளன.

1. வன்முறையாளர்கள், கூலிப்படையினர், கொலை குற்றவாளிகள் சம்பந்தப்பட்ட வழக்குகளை கோர்ட்டில் விரைந்து முடித்து, அவர்களுக்கு உரிய தண்டனை பெற்றுத்தந்து சிறையில் அடைக்க வேண்டும்.

2. கண்டுபிடிக்கப்படாமல் நீண்ட நாட்களாக நிலுவையில் இருக்கும் திருட்டு வழக்குகளில் குற்றவாளிகளை அடையாளம் கண்டு கைது செய்ய வேண்டும். திருடப்பட்ட பொருட்கள் மீட்கப்பட வேண்டும்.

3. தொடர்ந்து தவறு செய்யும் கீழ் மகன் (ரவுடி)களை மாவட்ட வருவாய் அதிகாரிகள் முன் ஆஜர்படுத்தி, நல்லொழுக்க பத்திரம் பெற வேண்டும். மீறுபவர்கள் ஓராண்டு காலம் சிறையில் அடைக்கப்பட வேண்டும்.

4. குழந்தைகளுக்கு எதிரான குற்றம் புரிந்தவர்கள் அன்றாடம் கண்காணிக்கப்பட வேண்டும். அவர்கள் மீண்டும் குற்றம் செய்யாதவாறு தடுக்கப்பட வேண்டும்.

5. அனைத்து பகுதிகளிலும் கண்காணிப்பு ஒளிக்கருவிகள் (ஒளிக்கருவி (கேமரா)க்கள்) நிறுவ முயற்சி மேற்கொள்ள வேண்டும்.

6. வாகன விபத்துகளை குறைக்க செயல்திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும்.

7. குற்றவாளிகளின் புகைப்படங்கள், காணொலிகள் ஆவணப்படுத்தப்பட வேண்டும். இவர்களை பிற்காலங்களில் அடையாளம் காண இது உதவியாக இருக்கும்.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்கலாம்…அரசு மரியாதையுடன் வார்னேவின் இறுதிச்சடங்கு நடைபெறும் – ஆஸ்திரேலியா பிரதமர் அறிவிப்பு

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »