Press "Enter" to skip to content

ரூ.40 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை

சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.776 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.39,760-க்கு விற்பனையாகிறது.

சென்னை:

தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே உயர்ந்த படியே இருந்து வருகிறது. கடந்த 24-ந் தேதி உக்ரைன்- ரஷியா இடையே போர் தொடங்கிய போது தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது. அன்று ஒரு பவுன் ரூ. 40 ஆயிரத்தை நெருங்கியது.

அதன்பின் 2 நாட்கள் விலை குறைந்து ரூ. 38 ஆயிரத்துக்கு கீழ் வந்தது. மறுநாள் தங்கம் விலை மீண்டும் ரூ. 38 ஆயிரத்தை தாண்டியது.

அதன்பின் கடந்த 2 நாட்களாக தங்கம் விலையில் ஏற்றத்தாழ்வு இருந்து வந்தது. நேற்று பவுனுக்கு ரூ. 72 உயர்ந்து ரூ. 38 ஆயிரத்து 984-க்கு விற்றது.

இந்த நிலையில் இன்று தங்கம் விலை ரூ. 40 ஆயிரத்தை நெருங்கியது. சென்னையில் இன்று காலை ஆபரண தங்கத்தின் விலையில் பவுனுக்கு ரூ. 776 உயர்ந்து ரூ. 39 ஆயிரத்து 760-க்கு விற்றது. ஒரு கிராம் ரூ. 4 ஆயிரத்து 970 ஆக உள்ளது.

தங்கத்தை போலவே வெள்ளி விலையும் உயர்ந்தது. வெள்ளி கிலோவுக்கு ரூ. 900 அதிகரித்து ரூ. 73 ஆயிரத்து 400 ஆக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ. 73.40க்கு விற்கிறது.

ரஷியா – உக்ரைன் போர் காரணமாக பங்குச் சந்தையில் கடும் சரிவு ஏற்பட்டு வருகிறது. இதனால் தங்கத்தின் மீது அதிகளவில் முதலீடு செய்யப்பட்டு வருகிறது. இதன் காரணமாக விலை உயர்ந்துள்ளதாக தெரிவித்தனர்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »