Press "Enter" to skip to content

புதின், இந்தப் போரில் நீங்கள் வெற்றிபெற மாட்டீர்கள் – உக்ரைன் வெளியுறவு மந்திரி

வெளிநாட்டு மாணவர்கள் உள்பட பொதுமக்களை வெளியேற்ற அனுமதிக்கும் வகையில் துப்பாக்கிச் சூட்டை நிறுத்துமாறு ரஷியாவை வலியுறுத்துகிறோம் என உக்ரைன் வெளியுறவு மந்திரி தெரிவித்துள்ளார்.

கீவ்:

உக்ரைன் வெளியுறவு மந்திரி டிமிட்ரோ குலேபா செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

புதின், உக்ரைனை விட்டு விடுங்கள். இந்தப் போரில் நீங்கள் வெற்றிபெற மாட்டீர்கள். ரஷியர்களின் உயிரைக் காக்க, இந்த ரத்தக்களரியை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான நேரம் இது. ஏற்கனவே 113 நிறுவனங்கள் ரஷியாவில் உங்களுடன் வேலை செய்வதை நிறுத்திவிட்டன. அவர்களின் முடிவுகளை நான் பாராட்டுகிறேன்.

ரஷியப் படைகள் மனிதாபிமான தாழ்வாரங்களை ஏற்பாடு செய்வதற்காக காலையில் எட்டப்பட்ட ஒப்பந்தத்தை மீறியது. வெளிநாட்டு மாணவர்கள் உள்பட பொதுமக்களை வெளியேற்ற அனுமதிக்கும் வகையில் துப்பாக்கிச் சூட்டை நிறுத்துமாறு ரஷியாவை வலியுறுத்துகிறோம்.

உக்ரைன் வெளிநாட்டு மாணவர்களை பணயக்கைதிகளாக வைத்திருப்பதாகவும், அவர்களின் உரிமைகளை மீறுவதாகவும், அவர்களுக்கு எதிராக பாகுபாடு காட்டுவதாகவும் குற்றம் சாட்டி இந்த நாடுகளின் அனுதாபத்தைப் பெற ரஷியா முயற்சிக்கிறது.

30 ஆண்டுகளாக ஆப்பிரிக்கா, ஆசியாவிலிருந்து ஆயிரக்கணக்கான மாணவர்களின் வரவேற்பு இல்லமாக  உக்ரைன் இருந்தது. வெளிநாட்டு மாணவர்களின் இயக்கத்தை எளிதாக்க, உக்ரைன் தொடர் வண்டிகளை ஏற்பாடு செய்தது. ஹாட்லைன்களை அமைத்தது. தூதரகங்களுடன் வேலை செய்தது. உக்ரைன் அரசு தன்னால் முடிந்ததைச் செய்துவருகிறது.

இந்தப் போர் அனைவரின் நலனுக்கும் எதிரானது என்பதை விளக்கி புதினைத் தொடர்ந்து தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம். ரஷியா மக்களும் இந்தப் போருக்கு ஆர்வம் காட்டவில்லை என தெரிவித்துள்ளார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »