Press "Enter" to skip to content

5 மாநில தேர்தலில் பா.ஜ.க. நிச்சயம் வெல்லும் – அமித்ஷா நம்பிக்கை

ஐந்து மாநில தேர்தல்களில் பா.ஜ.க. நிச்சயம் வெல்லும் என உள்துறை மந்திரி அமித்ஷா தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி:

உத்தர பிரதேசத்தில் 403 சட்டசபை தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடந்து வருகிறது. நாளை இறுதிக்கட்ட தேர்தல் நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு அன்றைய தினம் பொது விடுமுறை விடப்படுகிறது.

உத்தர பிரதேசத்தில் வாரணாசிக்கு உட்பட்ட வாரணாசி வடக்கு, வாரணாசி தெற்கு, வாரணாசி கன்டோன்மெண்ட் தொகுதிகளில் தேர்தல் நடைபெறுகிறது.  மொத்தம் 9 மாவட்டங்களில் 54 தொகுதிகளுக்கான தேர்தல் நடைபெற உள்ளது.

இந்நிலையில், டெல்லியில் உள்ள பா.ஜ.க. தலைமையகத்தில் பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, உள்துறை மந்திரி அமித்ஷா ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்துப் பேசினர்.

அப்போது பேசிய பா.ஜ.க. தலைவர் ஜே.பி. நட்டா, கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி சிறந்த முறையில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டோம். வாக்களித்த பொதுமக்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். உத்தரகாண்ட், உத்தர பிரதேசம், கோவா மற்றும் மணிப்பூரில் எங்களுடைய அரசை மீண்டும் பெரும்பான்மையுடன் கொண்டுவர மக்கள் முடிவு செய்துள்ளனர் என தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து அமித்ஷா பேசுகையில், ஐந்து மாநிலங்களில் பா.ஜ.க. நிச்சயம் வெல்லும். சிறப்பான ஆட்சியை மக்களுக்கு வழங்குவோம் என குறிப்பிட்டார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »